போலி தங்கம் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றிய பெண் வேட்பாளரின் கணவர் தப்பியோட்டம்!

வேலூரில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட  பெண் வேட்பாளரின் கணவர், ஓட்டுக்குப் பதில்’ வாக்காளர்களுக்கு தங்கக் காசுகளை அளித்துள்ளார். ஆனால் அவை வெறும் மஞ்சள் உலோகம் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஆம்பூரில் உள்ள 1,000க்கும் அதிகமாக  மக்கள் தலைமறைவான நபரை தேடி வருகின்றனர்.

வேலூர் உள்ளாட்சியின் 36வது வார்டு காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதையடுத்து, திமுக பிரமுகரான ஒருவர், தனது மனைவியை சுயேட்சையாக நிறுத்தினார். அவரை தேர்தலில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கட்சி அவரைக் கேட்டுக் கொண்டது. ஆனால் தன் மனைவி வெளியூரில் இருப்பதாகவும், இதனால் அவர் போட்டியிடும் ஐந்து வேட்பாளர்களில் ஒருவராக இருந்ததாகவும் திமுக பிரமுகர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பிப்ரவரி 18 இரவு, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு திமுக பிரமுகர், வாக்காளர்களின் வீட்டிற்குச் சென்று ஒரு கிராம் தங்கக் காசுகளை அளித்து, கடவுளின் படத்திற்கு முன்பாக தனது மனைவிக்கு வாக்களிப்பதாக உறுதிமொழி எடுக்கச் சொன்னார்.

தங்க நாணயம் கிடைத்ததில் பலர் மகிழ்ச்சியடைந்து, உறுதிமொழிக்கு கடமைப்பட்டு திமுக பிரமுகரின் மனைவிக்கு வாக்களித்து உள்ளனர்.

ஆனால், திமுக பிரமுகர் வாக்களார்களிடம், தங்கக் காசை விற்பதற்கு முன், தேர்தல் பரபரப்பு குறைய மூன்று நாட்கள் காத்திருக்கச் சொன்னதும், சிலருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து சிலர் அந்த பகுதியில் உள்ள அடகு புரோக்கர்களிடம் அந்த நாணயத்தை எடுத்துச் சென்ற சோதனை செய்தபோது அது உண்மையான தங்க நாணயங்கள் இல்லை என்பது தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த மக்களில் சிலர், தேர்தலில் திமுக பிரமுகரின் வெற்றி பெற்றாலும் அதை ஏற்க மாட்டோம் என்றும், மறுதேர்தல் நடத்தக் கோருவோம் என்றும் கூறினர். இருப்பினும், இன்று வரை தேர்தல் அதிகாரிகளிடமோ, காவல்துறையிடமோ புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தலைமறைவான திமுக பிரமுகரை தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க

நள்ளிரவில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை… சென்னையில் பயங்கரம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.