பாஜக – காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க முயற்சி; புதிய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ‘ரேஸில்’ யார்?.. எதிர்கட்சி தலைவர்களின் திடீர் சந்திப்பால் பரபரப்பு

புதுடெல்லி: பாஜக – காங்கிரஸ் அல்லாத கூட்டணியை அமைக்கும் முயற்சியில் சந்திர சேகர ராவ் இறங்கியுள்ள நிலையில், புதிய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ‘ரேஸில்’ உள்ளவர்கள் குறித்தும் எதிர்கட்சி தலைவர்களின் மத்தியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் நடைபெற்று வரும் நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் தங்களது அரசியல் நகர்வுகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அதன் ஒருபகுதியாக தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ், காங்கிரஸ் – பாஜக அல்லாத புதிய கூட்டணி அரசியலை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதற்காக அவர் நேற்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரை மும்பையில் சந்தித்தார். இவர்களின் சந்திப்பு குறித்து அரசியல் நோக்கர்கள் கூறுகையில், ‘வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை ேதர்தல், தேசிய அரசியலில் மாநிலங்களின் நலன்களைப் பாதுகாத்தல், மாநிலங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை பயன்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், வரும் ஜூலை மாதம் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய வேண்டியுள்ளதால், புதியதாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் வரும் ஜூலையிலும், துணை ஜனாதிபதிக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதத்திலும் நடைபெற உள்ளது. கடந்தமுறை நடைபெற்ற ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் ராம்நாத் கோவிந்த், வெங்கையா நாயுடுவுக்கு ெதலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆதரவளித்தது. ஆனால், இந்த முறை எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து, அவர்கள் சார்பில் புதிய வேட்பாளர்களை அறிவிக்க வியூகங்கள் வகுக்கப்படுகின்றன. அதனால் சந்திரசேகர் ராவ் தேசிய அளவில் புதிய கூட்டணியை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அதேநேரம் ஜனாதிபதி, துணை ஜனாதிபதித் தேர்தலில் தங்களது விருப்பமான வேட்பாளர்களை தேர்வு செய்ய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கணிசமான பெரும்பான்மை இருந்தாலும் கூட, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் நிலைமைகள் மாறவும் வாய்ப்புள்ளது. மேலும் புதிய ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதில் திமுக தலைவர் ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் சரத் பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பிஜூ ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்களின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. எதிர்கட்சிகள் தரப்பில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வேட்பாளர்களாக யாரை பரிந்துரைக்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன் பலமுறை காங்கிரஸ் அல்லாத6 மூன்றாவது அணியை உருவாக்குவதற்காக முயற்சிகள் நடந்துள்ளன; ஆனால் அவற்றின் வெற்றியானது கேள்விக்குறியாகவே உள்ளது. மம்தா பானர்ஜியைப் போலவே, சந்திரசேகர ராவும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை உருவாக்க முயற்சிக்கிறார். இருப்பினும், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு உள்ள பிரச்னை என்னவென்றால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றன. அதனால், தேசியவாத காங்கிரசும், சிவசேனாவும் எளிதில் காங்கிரசை விட்டு பிரியாது. காங்கிரஸ் இல்லாத கூட்டணி என்பது சாத்தியமில்லை. வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகளின் வியூகங்கள் ெதாடங்கிவிட்டன என்றே கூறமுடியும்’ என்றனர்.காங். இல்லாமல் சாத்தியமா?உத்தவ் தாக்கரே, சரத் பவார் ஆகியோரை சந்திர சேகர ராவ் சந்தித்தது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் கூறுகையில், ‘தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆளும் கூட்டணி (மகாராஷ்டிரா) தலைவர்களை சந்தித்துள்ளார். அவர், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதாக கூறுகிறார். காங்கிரஸ் இல்லாமல் இது சாத்தியமாகுமா?’ என்று கூறினார். இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறுகையில், ‘சிவசேனா உள்ளிட்ட பிற கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியை ஏற்படுத்தினாலும், எங்களுக்கு (பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி) எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. 2024ல் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். தற்போது தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் வெற்றி பெறுவோம்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.