புதுடெல்லி,
மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறையின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து இணைய கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்பான இணைய கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அதில் அவர் பேசியதாவது:-
நமது இளம் தலைமுறைதான் நாட்டின் எதிர்கால தலைவர்கள். எனவே இன்றைய இளம் தலைமுறையை மேம்படுத்துவது என்பது இந்தியாவின் எதிர்காலத்தை மேம்படுத்துவதாகும்.
2022 யூனியன் பட்ஜெட்டில் கல்வித்துறை தொடர்பான 5 விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
*முதலாவதாக, தரமான கல்வியை உலகமயமாக்கல்,
*இரண்டாவது, திறன் மேம்பாடு,
*மூன்றாவது, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு
*நான்காவது, சர்வதேசமயமாக்கல்- இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் உருவாக்குதல்
*ஐந்தாவது, விஷுவல் அனிமேஷன் தொழில்நுட்பம் சார்ந்த விளையாட்டுகள்(ஏ வி ஜி சி)
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த இந்த பட்ஜெட் உதவும். தேசிய டிஜிட்டல் பல்கலைக்கழகம் என்பது ஒரு முன்னோடி திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம், கல்வி பயில மாணவர்களுக்கு எண்ணற்ற இடங்கள் இருக்கும். இதனால் பல்கலைக்கழகங்களில் இருக்கை பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
விரைவில் டிஜிட்டல் (யூ என் ஐ) பரிவர்த்தனை தொடங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அனைத்து பங்குதாரர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.