தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் சுசீந்திரனும் ஒருவர். கடைசியாக இவர் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்‘ படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. தற்போது இவர் இயக்கத்தில்
வீரபாண்டியபுரம்
படம் வெளியாகியுள்ளது.
ஜெய், மீனாக்ஷி கோவிந்தராஜன், காளி வெங்கட்,
பாலா சரவணன்
உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பின்
ஜெய்
நடிப்பில் இந்தப்படம் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வீரபாண்டியபுரம் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் கதாநாயகி மீனாட்சி. இவருக்கும் கதாநாயகன் ஜெயிக்கும் இடையில் காதல் ஏற்படுகிறது. இந்த காதல் இருவீட்டார் பெற்றோர்களுக்கும் தெரிகிறது. இந்த இரு வீட்டு பெற்றோர்களும் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால் திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர்.
ஆனால் இறுதியில் மனம் மாறி பெண்ணை அவர் அப்பா சரத்திடமே ஒப்படைக்க செல்கிறார் ஜெய். இன்னொரு பக்கம் நெய்க்காரப்பட்டி தலைவர் ஜெயபிரகாஷ் குடும்பத்திற்கும் சரத் குடும்பத்திற்கும் தீராத பகை இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்சனை என்ன? ஜெய் காதல் கை கூடியாதா? என்ற கேள்விகளுக்கான பதிலே மீதி படம்.
‘வலிமை’ படம் குறித்து அஜித் சொன்ன வார்த்தை: படக்குழு எடுத்த அதிரடி முடிவு..!
வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ஜீவா போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த
சுசீந்திரன்
தானா? இந்த படத்தை இயக்கியுள்ளாரா என சந்தேகப்பட்டும் அளவிற்கு தமிழ் சினிமாவில் பார்த்து சலித்த கதைக்களத்தையே மீண்டும் கொடுத்துள்ளார் சுசீந்திரன்.
‘சிவ சிவ’ எனத் தலைப்பிடப்பட்டிருந்த இந்தப் படத்துக்கு ‘வீரபாண்டியபுரம்’ எனக் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. ‘சுப்ரமணியபுரம்’ போல ‘வீரபாண்டியபுரம்’ என இருக்கட்டும் என்று விநியோகஸ்தர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தலைப்பை மாற்றியதாக சுசீந்திரனே தெரித்திருந்தார்.
அதே போல் ஜெய்யின் கெட்டப்பும் ‘சுப்ரமணியபுரம்’ படத்தை ஞாபப்படுத்துவதை போலே அமைந்துள்ளது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை சிறிதும் பூர்த்தி செய்யவில்லை இந்தப்படம். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான மற்றுமொரு சுமாரான படைப்பாகவே ‘வீரபாண்டியபுரம்’ படத்தை சொல்லலாம்.
தல, தளபதி ரசிகர்களையே வியக்க வைத்த எதற்கும் துணிந்தவன்!