EPFO: உங்க அடிப்படை சம்பளம் ரூ.15,000 ரூபாய்க்கு மேல் உள்ளதா..? வருகிறது புதிய திட்டம்..!

ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO, மாதத்திற்கு 15,000 ரூபாய்க்கு மேல் அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியத் திட்டம் 1995 (EPS-95) இன் கீழ் இல்லாத வகைப்படுத்தப்படாத துறையில் இருக்கும் ஊழியர்களுக்கு ஒரு புதிய ஓய்வூதிய திட்டத்தை உருவாக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது வகைப்படுத்தப்பட்ட துறையில் பணியில் சேரும் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 15000 ரூபாய்க்கு மேல் இருந்தால் அவர்கள் அனைவரும் EPS-95 கீழ் கட்டாயம் சேர்க்கப்படுவார்கள்.

மார்ச் கடைசி.. எல்லோரும் ஆபீஸ்-க்கு கிளம்புங்க.. ஐடி ஊழியர்களுக்குப் பறந்த உத்தரவு..!

EPFO அமைப்பு

EPFO அமைப்பு

ஊழியர்கள் மத்தியில் பல ஆண்டுகளாக அதிகப் பென்ஷன் தொகையைப் பெற அதிக முதலீடு செய்ய வாய்ப்பு அளிக்குமாறு EPFO அமைப்பிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக EPFO அமைப்புத் தற்போது புதிய முதலீட்டுத் திட்டத்தை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முக்கியக் கூட்டம்

முக்கியக் கூட்டம்

இப்புதிய திட்டம் குறித்து மார்ச் மாதம் 11 மற்றும் 12ஆம் தேதி EPFO அமைப்பு மத்திய கருவூல அமைப்புடன் நடத்தும் ஈபிஎப் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் இந்தத் தனி முதலீட்டுத் திட்டம் குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளது.

8.33 சதவீதம்
 

8.33 சதவீதம்

தற்போது ஈபிஎப்ஓ கணக்காளர்களில் 15000 ரூபாய்க்கு அதிகமாக அடிப்படை சம்பளம் கொண்டு இருந்தாலும் EPS-95 சட்ட விதிமுறைகள் கீவ் 8.33 சதவீதம் அடிப்படையில் 15000 ரூபாய்க்கு மட்டுமே ஈபிஎப் கணக்கில் வைப்பு செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் அதிக அடிப்படை சம்பளம் வாங்குவோரும் குறைந்த தொகையை மட்டுமே செலுத்தி வருகின்றனர்.

25000 ரூபாய் அளவீடு

25000 ரூபாய் அளவீடு

2014ஆம் ஆண்டுச் செப்டம்பர் 1ஆம் தேதி விலைவாசி உயர்வின் காரணமாகப் பிஎப் பிடித்த அளவீட்டை 6500 ரூபாயாக இருந்த நிலையில் 15000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது இந்த அளவீட்டை 25000 ரூபாய் வரையில் உயர்த்தப்படத் திட்டமிடப்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

EPFO creating new pension scheme for formal workers getting over Rs 15K basic wage

EPFO creating new pension scheme for formal workers getting over Rs 15K basic wage EPFO: உங்க அடிப்படை சம்பளம் ரூ.15,000 ரூபாய்க்கு மேல் உள்ளதா..? வருகிறது புதிய திட்டம்..!

Story first published: Monday, February 21, 2022, 19:54 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.