ஒடிசா,
ஒடிசா மாநிலத்தின் ரெதாகோல் வனப் பிரிவுக்குட்பட்ட சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள சட்சாடி மற்றும் அங்கபிரா கிராமங்களுக்குள் கடந்த செவ்வாய்கிழமை அன்று ஒற்றை யானை ஒன்று புகுந்தது. அந்த யானை அப்பகுதியில் உள்ள பயிர்களை நாசம் செய்யத் தொடங்கியது.
அப்போது வனக் காவலர் சித்த ரஞ்சன் மிரி அந்த இடத்தை அடைந்து யானையை காட்டுக்குள் விரட்ட முயற்சி செய்தார், அவருடன் இருந்த அனைவரும் ஓடிவிட்டாலும், ரஞ்சன் தனி ஒரு ஆளாக நின்று, யானையை விரட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தினார். அதன் பின் தீ பந்தத்தை காட்டி யானையை காட்டுக்குள் விரட்டி மக்களுக்கு பாதுகாப்பு அளித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
“எந்தவொரு மனித அல்லது யானை உயிரிழப்பையும் தவிர்க்கும் வகையில், குறைந்தபட்ச தகுதியை பயன்படுத்தி யானைகளை விரட்டுவதற்கு நாங்கள் பயிற்சி பெற்றுள்ளோம். யானைகள் நெருப்புக்கு மட்டுமே பயப்படும், அது என்னை நோக்கி வந்ததும் அதை நோக்கி தீ பந்தத்தை காட்டினேன், அது உடனே நின்றது. இல்லாவிட்டால் யானையால் எளிதில் என்னை மிதித்திருக்க முடியும்” என்றார்.
இந்த வீடியோவை ஒரிசாவின் ஐஎப்எஸ் அதிகாரி சுஷாந்த் நந்தா பகிர்ந்துள்ளார்.
அதில், தீங்கு விளைவிக்கும் வன விலங்குகளிடம் இருந்து மக்களை காக்க, தங்கள் உயிரை பற்றி கவளைபடாமல் தைரியமாக எதிர்கொள்ளும் தனது பகுதி ஊழியர்களின் துணிச்சலை அவர் பாராட்டினார். மேலும் யானையை தடுத்து நிறுத்திய வனக்காவலர் சித்தரஞ்சனின் துணிச்சலுக்கு வணக்கம் தெரிவித்தார்.
Salutation to this Forest Guard from Rairakhol Forest Divison, Odisha. Mr Chita Ranjana’s action is the epitome of hard work our field staff do in the face of adversity.
Stands his ground alone and chases the crop raiding tusker. pic.twitter.com/yY5CkOSUJk— Susanta Nanda IFS (@susantananda3) February 17, 2022