கொரோனா தொற்று பல கோடி மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது போல் இந்த 3 பிடெக் பட்டதாரிகளின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டு உள்ளது.
ஒருபக்கம் படித்து முடித்து வேலைவாய்ப்புக் கிடைக்காமல் தவித்து வரும் மக்கள் மத்தியில், கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பை இழந்தால் எவ்வளவு பெரிய பாதிப்பை வாழ்க்கையில் ஏற்படுத்தும் என்பது அவரவர்களுக்கு மட்டுமே தெரியும், ஆனால் இந்த 3 பிடெக் பட்டதாரிகள் மனந்தளராமல் ஸ்மார்டாக யோசித்துச் சூப்பரான பெயரும் டீ கடையைத் திறந்து இன்று இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளனர்.
EPFO: உங்க அடிப்படை சம்பளம் ரூ.15,000 ரூபாய்க்கு மேல் உள்ளதா..? வருகிறது புதிய திட்டம்..!
3 பொறியியல் பட்டதாரிகள்
ஆனந்து அஜய், முகமது ஷஃபி மற்றும் அவரது சகோதரர் முகமது ஷானவாஸ் ஆகிய மூன்று பொறியியல் பட்டதாரிகள் கொரோனா காலத்தில் வேலையை இழந்த பின்பு பிடெக் சாய் என டீ கடையைத் தொடங்கினார்கள். கேரளா மாநிலத்தில் கொல்லம் மாவட்டத்தின் மிகவும் பரபரப்பான பகுதிகளில் ஒன்றின் சாலையோரத்தில் தள்ளு வண்டியை டீ கடையைத் திறந்து தற்போது இந்தியா முழுவதும் வைரலாகி உள்ளது.
வேலைவாய்ப்பு இழப்பு
ஆனந்து அஜய் மற்றும் முகமது ஷஃபி ஆகிய இருவரும் கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பை இழந்த நேரத்தில் ஷஃபி-யின் சகோதரர் முகமது ஷானவாஸ் வளைகுடா நாடுகளில் பணியாற்றிய இடத்தில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்ட காரணத்தால் வேலையை விட்டுக் கேரளா திரும்பினார்.
கடும் எதிர்ப்பு
கொரோனா காலத்தில் தொழில் துவங்க வேண்டும் என்று வீட்டில் கூறிய போது கடுமையான எதிர்ப்பை இருவரின் வீட்டிலும் எதிர்கொண்டு உள்ளனர், ஆனாலும் மனம் விடாமல் முதல் டீ கடையைத் தள்ளு வண்டியில் துவங்கத் திட்டமிட்டனர்.
Btech Chai கடை
மூவரும் வேலைவாய்ப்பை இழந்த காரணத்தால் கையில் இருக்கும் சிறிய அளவிலான பணத்தை வைத்துக் கொண்டு பிற டீ கடைகளை விடவும் சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக Btech Chai என்ற பெயரில் தள்ளு வண்டியில் 50 க்கும் மேற்பட்ட சுவைகளில் டீ விற்பனை செய்யத் துவங்கினர்.
நம்பிக்கை
டீ கடையைத் துவங்கும் முன்பு பிடெக் படித்து விட்டு டீ கடை திறப்பதா என்ற கேள்வி இருவரின் வீட்டுலும் இருந்தது. ஆனால் முகமது ஷானவாஸ் பல வருடங்களாக வளைகுடா நாட்டில் பெயின்டிங், கேட்டரிங், ஈவென்ட் மேனேஜ்மென்ட் எனப் பல பணிகளைச் செய்த அனுபவம் இருந்த காரணத்தை மூவரும் உறுதியாக டீ கடையைத் திறக்க முடிவு செய்தனர்.
1.5 லட்சம் ரூபாய் முதலீடு
கடன் மற்றும் நீண்ட காலச் சேமிப்பு மூலம் கையில் இருந்த 1.5 லட்சம் ரூபாயை வைத்து பல மாதங்கள் திட்டமிடலுக்குப் பின்பு எந்த வகையிலும் நஷ்டம் ஏற்படக் கூடாது என்பதைச் சிறப்பான முறையில் திட்டமிட்டு முதல் Btech Chai கடையைத் திறந்துள்ளனர்.
கொல்லம் பகுதி
முதல் Btech Chai கடையைத் திறந்த உடன் கொல்லம் பகுதியில் மிகவும் பிரபலமானது. 50 சுவையில் டீ, குறைந்த விலையில் ஸ்னாக்ஸ் என விற்பனை செய்யப்பட்ட காரணத்தால் அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் குறுகிய காலகட்டத்தில் இந்தத் தள்ளு வண்டி கடை பெற்றுள்ளது.
தள்ளு வண்டி கடை
Btech Chai தள்ளு வண்டி கடையில் 5 முதல் 45 ரூபாய் விலையில் 50 வகை டீ, உடன் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட
சட்டி பத்திரி, கிளிகூடு, உன்னக்காய, எரச்சி அட, முட்டை பெட்டி, போன்ற பல தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விரிவாக்கம்
தற்போது 101 வகை டீ வகைகளை அறிமுகம் செய்யும் திட்டத்தில் இறங்கியுள்ள இந்த மூவர் கூட்டணி விரைவில் கேரளா மற்றும் பிற மாநிலத்திலும் இதே BTech Chai என்ற பெயரில் டீ கடைகளைத் திறக்கவும், வர்த்தகத்தையும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகின்றனர்.
வெற்றி எப்போதும் நம்முடைய கையில் தான் உள்ளது..!
3 Engineers Selling Tea From a Pushcart after losing jobs on Covid Time
3 Engineers Selling Tea From a Pushcart after losing jobs on Covid Time தள்ளுவண்டியில் டீ கடை திறந்த பிடெக் பட்டதாரிகள்.. சூடுபிடிக்கும் விற்பனை..!