லாலு உடல் நிலை: டாக்டர்கள் தகவல்

ஐந்தாவது ஊழல் வழக்கில் குற்றவாளி என, கடந்த, 15ம் தேதி நீதிமன்றம் அறிவித்த பின், லாலு பிரசாத், ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டார். பின், உடல் நிலை பாதிப்பு காரணமாக, ராஞ்சியில் உள்ள ஆர்.ஐ.எம்.எஸ்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்தபடியே, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக லாலு ஆஜர்படுத்தப்பட்டார். லாலுவின் உடல் நிலை பற்றி டாக்டர்கள் கூறியதாவது:லாலுவின் உடல் நிலை மோசமாக இருந்தாலும், நிலையாக உள்ளது. அவரது உடலில் சர்க்கரை அளவும், ரத்த அழுத்தமும் ஏற்றம், இறக்கமாக உள்ளது. அவர் சிறுநீரக கோளாறாலும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது சிறுநீரகத்தின் செயல்பாடு, ௨௦ சதவீதமாக உள்ளது. அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.