சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அ.தி.மு.க. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை அ.தி.மு.க.வினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கினர்.
இதற்கிடையே, தி.மு.க. பிரமுகரை தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பிறகு ஜெயக்குமாரை இன்று இரவு போலீசார் கைது செய்தனர். அதன்பின் அவரை போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், கள்ள ஓட்டு போட முயற்சி செய்த நபரைப் பிடிக்க முயன்றபோது தி.மு.க.வை சேர்ந்த 3 பேர் தன்னை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஓட்டுநர் ஜெகநாதன் புகார் அளித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து தி.மு.க.வைச் சேர்ந்த கொளஞ்சியப்பன், ஸ்ரீதர், சுதாகர் ஆகியோரை தண்டையார்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்…கல்லூரிகளில் ஆன்லைன் பட்டப்படிப்புக்கு பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி