தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது. சமீபத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதற்காக மாநகராட்சி பகுதியில் 15,158 வாக்குச் சாவடிகளும், நகராட்சி பகுதியில் 7,417 வாக்குச் சாவடிகளும், பேரூராட்சி பகுதியில் 8,454 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 31 ஆயிரத்து 150 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தபால் வாக்கு முன்னிலை நிலவரம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, 1373 வார்டுகள் கொண்ட மாநகராட்சியில் திமுக கூட்டணி 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
நகராட்சிகளில் உள்ள 3,842 வார்டுகளில், 14 வார்டுகளில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. 8 இடங்களில் மற்ற கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளது.
மாநகராட்சிகளில் உள்ள 7605 வார்டுகளில், திமுக கூட்டணி 103 இடங்களிலும், அதிமுக கூட்டணி 10 இடங்களிலும் ,மற்ற கட்சிகள் 92 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.