நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்! விஜய் மக்கள் இயக்கத்தின் 2 வேட்பாளர்கள் வெற்றி


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனது வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது.

தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி திமுக 7 மாநகராட்சியில் முன்னிலை வகிக்கிறது, அதே போல 24 நகராட்சியில் திமுக கூட்டணியும், 4 நகராட்சியில் அதிமுக கூட்டணியும் முன்னிலை பெற்றுள்ளது.

முழு முடிவுகள் வந்த பின்னரே மொத்தமாக எந்த கட்சி எவ்வளவு இடத்தை வென்றுள்ளது என்பது தெரியவரும்.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கமும் உள்ளாட்சி தேர்தலில் களம் கண்டது.
இயக்கத்தை சார்ந்தவர்கள் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
அதன்படி புதுக்கோட்டை நகராட்சியில் 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர் பர்வேஷ் 547 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அதே போல இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை நகராட்சி 3ஆவது வார்டிலும் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.