40 உறுப்பினர்களை கொண்ட கோவா மாநில சட்டமன்றத்துக்கு பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இத்தேர்தல் முடிவுகள் மார்ச் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இத்தேர்தலில் காங்கிரஸ்,
பாஜக
,
ஆம் ஆத்மி
என எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது. தொங்கு சட்டப்பேரவை அமைவே அதிக வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து அங்கு ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் ஆளும் பாஜக,
காங்கிரஸ்
கட்சிகள் இப்போதே இறங்கி உள்ளன.
இதில் குறிப்பாக, ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கவுள்ள சுயேச்சைகளை வளைத்து தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
ஆட்சி அமைக்க ஆதரவு தந்தால் அமைச்சர் பதவி நிச்சயம் என்று ஆசைவார்த்தை கூறி, இரு கட்சிகளும் சுயேச்சைகளை வளைத்து போட தீவிரம் காட்டி வருகின்றனவாம். இதனால் அங்கு சுயேச்சை வேட்பாளர்களுக்கு மவுசு கூடி உள்ளது.
40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 21 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பாஜக 13 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனால் சுயேச்சைகள், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.