இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையை அடுத்து நாளையதினம் (23) மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின்னுற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான எரிபொருள் இன்மை காரணமாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒரு சில பகுதிகளுக்கு 4 மணித்தியாலங்கள் 30 நிமிட மின்வெட்டும் மேலும் சில பகுதிகளுக்கு 4 மணித்தியாலங்கள் 40 நிமிட மின்வெட்டும் அமுல்படுத்த, இலங்கை மின்சார சபைக்கு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டை 11 வலயங்களாக பிரித்து இரண்டு கட்டங்களில் புதிய நேரங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய A,B,C பிரிவுகளில் உள்ள பிரதேசங்களுக்கு 4 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஏனைய பகுதிகளான P,Q,R,S,T,U,V,W பிரிவுகளில் உள்ள பிரதேசங்களுக்கு 4 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.