தமிழ் இசை அமைப்பாளர் மீது கல்யாணி பாலியல் குற்றச்சாட்டு
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார் கல்யாணி . கத்திகப்பல், இளம்புயல், பிரதி ஞாயிறு 9.30 டூ 10.00 உள்பட பல படங்களில் நடித்தார். சினிமா வாய்ப்புகள் இல்லாமல் சின்னத்திரை பக்கம் வந்தவர் ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். தற்போது திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்.
இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: எனக்கு 8 வயது இருக்கும். இப்போது பிரபலமாக இருக்கும் ஒரு இசை அமைப்பாளர் எங்கள் குடும்பத்திற்கு நல்ல நெருங்கிய நண்பர். அவர் நான் தூங்கும் போது என்னை தேவை இல்லாத இடங்களில் தொடுவார். அதை இப்ப நினைத்தால் கூட எனக்கு கஷ்டமாக இருக்கிறது. இதை நான் எங்கேயுமே சொன்னது இல்லை. முதல் முறையாக என் கணவரிடம் தான் இதை சொன்னேன்.
இப்போது அதை நினைத்தால் கூட எனக்கு அருவருப்பாக இருக்கிறது. இந்த மாதிரி பல பாலியல் தொல்லையால் மன ரீதியாக பாதிக்கப்பட்டேன். தற்கொலைக்கு கூட முயன்றேன் என்றார்.