கராச்சி,
பாகிஸ்தானில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் லாகூர் குலாண்டர்ஸ் அணி வீரர் கம்ரான் குலாம், ஒர் கேட்ச் வாய்ப்பை தவறவிட்டதால், சக வீரரும், வேகப்பந்துவீச்சாளருமான ஹாரிஸ் ரவுப் அவரின் கன்னத்தில் அறைந்தார்.
ஆனால் கம்ரன் குலாம் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் கம்ரான் குலாம் ரன் அவுட் மூலம் வஹாப் ரியாசை வெளியேற்றினார். இதனால், உற்சாகமடைந்த ஹாரிஸ் ரவுப், கம்ரன் குலாமை கட்டிப்பிடித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஹாரிஸ் ரவுப், கம்ரான் குலாமின் கன்னத்தில் அறைந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிகழ்வானது இருவரிடையே ஒருமித்த புரிதலின் வெளிப்பாடாக இருந்தாலும், மைதானத்தில் ஹாரிஸ் ரவுப் சக வீரரின் கன்னத்தில் அறைந்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே விமர்சனத்திற்கு உள்ளானது.
🫂 #HBLPSL7 l #LevelHai l #LQvPZpic.twitter.com/hg5uCFmgac
— PakistanSuperLeague (@thePSLt20) February 21, 2022