எலான் மஸ்க்-ன் புதிய கேர்ள் பிரண்ட் இவர்தான்.. 50 வயதில் செய்யும் வேலையா இது..!

எலான் மஸ்க், உலகை புரட்டிப்போடும் பல தொழில்நுட்பத்தையும், நிறுவனத்தையும் உருவாக்கி வாழும் ஐன்ஸ்டீன் என்றும் பலரால் பாராட்டப்படும் நிலையில், அவருடைய பர்சனல் வாழ்க்கை ஆரம்பம் முதல் மோசமானதாகவே இருந்து வருகிறது.

ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்து விவாகரத்து ஆன நிலையில், 3 வருடமாக க்ரைம்ஸ் உடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த நிலையில் 2021ல் க்ரைம்ஸ்-ஐ பிரேக்அப் செய்த 50 வயதான எலான் மஸ்க் தற்போது 27 வயதான நடாஷா பாசெட்-ஐ டேட்டிங் செய்து வருகிறார்.

யார் இந்த நடாஷா பாசெட் என்பது தான் தற்போது அனைவரின் முக்கியக் கேள்வியாக உள்ளது.

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க், க்ரைம்ஸ் உடன் பிரேகப் செய்த நிலையில் புதியதாக ஒரு பெண்ணை டேட்டிங் செய்யத் துவங்கியுள்ளார். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் என்னும் மாபெரும் நிறுவனத்தின் சிஇஓ-வான எலான் மஸ்க் இப்போது 27 வயதான ஆஸ்திரேலியா நடிகை நடாஷா பாசெட்-ஐ டேட்டிங் செய்து வருகிறார்.

நடாஷா பாசெட்

நடாஷா பாசெட்

சமீபத்தில் நடாஷா பாசெட், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் எலான் மஸ்க்-ன் பிரைவேட் ஜெட் விமானத்தில் இருந்து வெளியே வந்தது, கடந்த சில வாரங்களில் அமெரிக்காவில் பல இடத்தில் நடாஷா பாசெட் – எலான் மஸ்க் ஒன்றாகத் தென்பட்டது குறிப்பிடத்தக்கது.

233 பில்லியன் டாலர்
 

233 பில்லியன் டாலர்

இந்த இளம் மாடல் மற்றும் நடிகையான நடாஷா பாசெட் எலான் மஸ்க்-ன் பிரமிக்க வைக்கும் மூளைக்குத் தான் விழுந்ததாகவும், அவருடை பணத்திற்காக அல்ல என்று கூறியதாகத் தெரிகிறது. இன்றைய நிலையில் எலான் மஸ்க் சுமார் 233 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார்.

மனைவி

மனைவி

எலான் மஸ்க் தனது முதல் மனைவியான எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன் உடன் ஐந்து மகன்கள் கொண்டு உள்ளார். ஜஸ்டின் வில்சன்-ஐ விவாகரத்து செய்த பின்பு பிரிட்டிஷ் நடிகை தலுலா ரிலே-வை இரண்டு முறை திருமணம் செய்து இரண்டு முறை விவாகரத்துச் செய்தார்.

கேர்ள் பிரண்ட்

கேர்ள் பிரண்ட்

செப்டம்பர் 2021 இல் பாடகரான க்ரைம்ஸ் இடமிருந்து மஸ்க் பிரேக்அப் செய்தாக. இவருக்கும் X AE A-Xii என்ற ஒரு வயது மகன் உள்ளார். எலான் மஸ்க்-கிற்கு மொத்தம் 7 மகன்கள் அதில் ஒரு குழந்தை இறந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Elon Musk is dating 27-year-old model Natasha Bassett after breakup Grimes

Elon Musk is dating 27-year-old model Natasha Bassett after breakup Grimes எலான் மஸ்க்-ன் புதிய கேர்ள் பிரண்ட் இவர்தான்.. 50 வயதில் செய்யும் வேலையா இது..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.