நேரடி பொதுத் தேர்வுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கான இரண்டு பருவத் தேர்வுகளை ஏப்ரல் 26-ம் தேதி முதல் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒடிசா- என்ஒய்சிஎஸ் மாணவர் சங்கத்துடன் இணைந்து குழந்தை உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான அனுபா ஸ்ரீவஸ்தவா சஹாய் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அனைத்து ஸ்டேட் போர்ட், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் (என்ஐஓஎஸ்) மூலம் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான ஆஃப்லைன் தேர்வுகளை ரத்து செய்யும்படி கோரிக்கை விடப்பட்டது.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. சம்பந்தப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி மேல்முறையீட்டையும் நிராகரித்தது. பின், இதுபோன்ற மனுக்கள் தவறான நம்பிக்கையை உருவாக்குவது மட்டுமல்லாமல், தயாராகும் மாணவர்களுக்கு குழப்பத்தை உருவாக்குகிறது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்.. மின்வாரிய ஊழியர்கள் ஸ்டிரைக்- 36 மணிநேரம் இருளில் மூழ்கிய சண்டிகர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.