நீங்கள் வீடு கட்ட அல்லது வாங்க திட்டமிட்டிருந்தால் இது நிச்சயம் நல்ல வாய்ப்பு எனலாம். ஏற்கனவே வட்டி விகிதம் வரலாறு காணாத அளவு குறைந்துள்ள நிலையில், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் பற்பல சலுகைகளை வழங்கி வருகின்றன. ஆக குறைந்த வட்டியில் பல சலுகைகளுடன் வீடு வாங்கும் யோகம் நல்ல வாய்ப்பு தானே.
இவற்றோடு சமீபத்தில் ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வங்கியானது வட்டி மட்டுமே செலுத்தும் ஒரு திட்டத்தினை அறிவித்தது.
இது வேறு கட்டணங்களோ செலவுகளோ கட்டணங்களாக எதுவும் கிடையாது. கட்டி முடிக்கப்பட்ட வீட்டுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும் என்று இவ்வங்கி அறிவித்தது.
கர்நாடக முதல்வர், அமைச்சர்கள் சம்பளம் 50% உயர்வு.. 2000 லிட்டர் பெட்ரோல் இலவசம்..!
வட்டி செலுத்தினால் போதும்?
இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர் கடனுக்கான காலத்தில் அசல் நிலுவை தொகைக்கு மட்டுமே வட்டி செலுத்த வேண்டும். இந்த திட்டத்திற்கு வட்டி மட்டுமே உள்ள காலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடு வரை வாடிக்கையாளர் வட்டி மட்டுமே செலுத்த வேண்டும். இந்த காலகாட்டத்தில் கடன் தொகையிலிருந்து அசல் தொகை கழிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
வட்டி + அசல்
இந்த காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்கள் வட்டியை மட்டுமே செலுத்தினால் போதும். அசல் தொகை கழிக்கப்படாது. இந்த சலுகையானது குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படும். ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வங்கியானது ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் அல்லது புதியதாக கடன் வாங்குபவர்களுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது.
EMI நிலுவை தொகை
வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் 35 லட்சம் ரூபாய் முதல் 3.5 கோடி ரூபாய் வரையிலான ஹோம் லோனினை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 1 – 3 வருடங்களுக்கு வட்டித் தொகையை மட்டுமே மாத மாதம் செலுத்தலாம். வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்த பிறகு, இது சாதாராண வீட்டுக் கடனாக மாறும். அதன் பிறகு வாடிக்கையாளர் தனது EMI நிலுவை தொகையை செலுத்திக் கொள்ளலாம்.
எஸ்பிஐ
எஸ்பிஐ உள்ளிட்ட பல வங்கிகளும் இந்த சலுகை திட்டத்தினை வழங்குகின்றன. எஸ்பிஐ பிளெக்ஸிபே என்ற பெயரில் வீட்டுக் கடன் திட்டத்தினை வழங்குகின்றது. இது வீடு கட்டுமானத்தில் இருக்கும்போது கவர்ச்சிகரமான திட்டமாக பார்க்கப்படுகிறது.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
இந்த திட்டத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு வட்டியை மட்டுமே செலுத்துவதால், ஆரம்ப காலத்தில் சுமை சற்று குறையும். எனினும் இந்த திட்டத்தில் ஒட்டுமொத்த காலத்திற்கும் திரும்ப செலுத்தும் தொகையானது சற்று அதிகமாக இருக்கும். அது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.
ரெகுலர் கடன்
உதாராணத்திற்கு 30 வருட காலத்திற்கு 8% நிலையான வட்டி விகிதத்தில், 50 லட்சம் ரெகுலர் வீட்டுக் கடனுக்கு மாத தவணை தொகை 36,688 ரூபாயாக இருக்கலாம். மொத்த காலத்தில் செலுத்தும் தொகை+ வட்டி சேர்த்து 1.32 கோடி ரூபாயாக இருக்கும்.
வட்டி மட்டும் செலுத்தும் வீட்டுக் கடன்
நீங்கள் 3 வருடத்திற்கு மட்டுமே வட்டியை மட்டுமே செலுத்தும் ஆப்சனை தேர்வு செய்திருந்தால், முதல் 3 ஆண்டுகளுக்கு 33,333 ரூபாயாக இருக்கும். அதன் பிறகு அசல் + வட்டி சேர்த்து 37,713 ரூபாயாக தவணைத் தொகை இருக்கும். இந்த திட்டத்தில் மொத்தமாக செலுத்தும் தொகை 1.34 கோடி ரூபாயாக இருக்கும். இதில் 2 லட்சம் வேறுபாடு உள்ளது. இதே வாடிக்கையாளார் ஃப்ளோட்டிங் ரேட்டினை தேர்வு செய்தால் இந்த தொகை இன்னும் மாறுபடலாம்.
கொஞ்சம் யோசியுங்கள்
வட்டி மட்டுமே செலுத்தும் காலத்தில் உங்களது EMI தவணை தொகையை வேறு இடத்தில் முதலீடு செய்து கொள்ளலாம். எனினும் உங்கள் முதலீடுகளின் மூலம் கிடைக்கும் வருமானம், வீட்டுக் கடன் வட்டி விகிதத்தினை விட அதிகமாக இருந்தால் அதனை பற்றி யோசிக்கலாம்.
interest only home loan : advantages & disadvantages
interest only home loan : advantages & disadvantages/இன்ட்ரஸ்ட் ஒன்லி ஹோம் லோன்.. வீடு கட்டுவோருக்கு நல்ல விஷயம் தான்..!