அஜித்தின் ‘வலிமை’ படத்தில் பிரபல தமிழ் நடிகரின் மகன்? – வெளியான சுவாரஸ்ய தகவல்

‘வலிமை’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு, ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 2-வது முறையாக நடித்துள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம், நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின், நாளை உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கிறது. இதையொட்டி தினம் தினம் புதிய அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன.

அந்தவகையில், ‘வலிமை’ படத்தில் மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் படம் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் அஜித்தின் அப்பாவாக அவர் காட்டப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ‘வலிமை’ திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

image

ஆனால் இந்தப்படத்தில் அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்பது தெரியவில்லை. ஏற்கனவே விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ‘நானும் ரவுடி தான்’ படத்தில் சிறுவயது சேதுபதியாகவும், ‘சிந்துபாத்’ படத்தில் விஜய் சேதுபதியின் மகனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ‘வலிமை’ படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்பதிவிற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பால் வலிமை படம் வசூலில் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.