பிரித்தானியாவில் மாதவிடாயை பற்றி பேசி அசிங்கப்படுத்திய முதலாளி மீது பெண் வழக்கு..வெளியான தீர்ப்பு



பிரித்தானியாவில் அவசியம் இல்லாமல் வாடிக்கையாளரின் முன் மாதவிடாயை பற்றி பேசி சங்கடத்திற்கு உள்ளாக்கிய முதலாளியின் மீது பெண் ஊழியர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது.

இங்கிலாந்தின் எசெக்ஸ் பகுதியில் எம்பார்க் ஆன் ரா (Embark on Raw) என்ற செல்லப்பிராணிகளுக்கான உணவுக் கடையில் விற்பனையாளராக பணியாற்றுபர் லீ பெஸ்ட் (Leigh Best). 54 வயதாகும் இவர் திருமணமானவர்.

ஒருமுறை இவர் கடையில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, அவருக்கும் அவரது முதலாளியான டேவிட் பிளெட்சர் (David Fletcher) வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது “உனக்கு இந்நேரம் மாதவிடாய் முடிந்திருக்கவேண்டும்” என்று வாடிக்கையாளர்கள் முன் கத்தி கூச்சலிட்டுள்ளார்.

இது லீ பேஸ்டுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதை கேட்க விருப்பமில்லாமல் அவர் தனது கைகளால் காதுகளை மூடிக்கொண்டுள்ளார். இருப்பினும், பிளெட்சர் விடாமல் அவரை திட்டியும் கொச்சையாகவும் பேசியுள்ளார்.

இந்த சம்பவம் லீ பேஸ்டுக்கு பெரும் மன உளைச்சலையும், வருத்தத்தையும் ஏற்ப்படுத்தியது. இது குறித்து பெஸ்ட் தனது முதலாளியின் மனைவியும் கூட்டாளியுமான ஆண்ட்ரியாவிடம் கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா, தேவையில்லாமல் புலம்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி ஒருமாதம் கழித்து லீ பெஸ்ட் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் அவர், தனது முதலாளியின் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

பெண்ணை அவரது வயது மற்றும் பாலின பாகுபாடு மற்றும் நியாயமற்ற பணிநீக்கம் செய்த குற்றத்திற்காக பிளெட்சர், பாதிக்கப்பட்ட லீ பேஸ்டுக்கு 20,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து லீ பெஸ்ட் தற்போது RawKings என்ற பெயரில் சொந்தமாக பூனை, நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கான உணவுக் கடையை தொடங்கியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.