இந்திய அரசிடம் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை 69 வருடத்திற்குப் பின்பு மீண்டும் டாடா குழுமம் கைப்பற்றிய நிலையில், ஆரம்பம் முதல் பல மாற்றங்களை அதிரடியாகச் செய்து வந்தது.
குறிப்பாக ஏர் இந்தியாவில் நீண்ட காலமாக முக்கியப் பிரச்சனையாக இருந்த வாடிக்கையாளர் சேவை, உணவு தரம், ஆன் டைம் விமானச் சேவை போன்றவற்றை மேம்படுத்தப் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.
இந்தச் சூழ்நிலையில் ஏர் இந்தியாவைக் கைப்பற்றிப் பல வாரங்களாகப் புதிய சிஇஓ பெயரை அறிவிக்கக் காலதாமதம் ஆன நிலையில் கடந்த வாரம் துருக்கி நாட்டைச் சேர்ந்த இல்கர் ஆய்சி பெயரை அறிவித்தது. ஆனால் இங்கு தான் பிரச்சனை துவங்கியுள்ளது.
ஏர் இந்தியா சிஇஓ இல்கர் ஆய்சி
டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகத் துருக்கி நாட்டவரான இல்கர் ஆய்சி-ஐ நியமனம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இந்த நியமனத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் பாதுகாப்பு அனுமதியைப் பெற டாடா சன்ஸ் மத்திய அரசிடம் கோரியது.
இந்தியா – துருக்கி நட்புறவு
இது அனைத்து நிறுவனத்திலும் நடக்கும் இயல்பான ஒன்றாக இருந்தாலும், இந்தியா – துருக்கி மத்தியிலான நட்புறவில் சில பிளவுகள் இருக்கும் காரணத்தால் இல்கர் ஆய்சி நியமனத்தில் பிரச்சனை உருவாகியுள்ளது. இல்கர் ஆய்சி நியமனத்திற்குத் தேவையான ஆவணங்களை டாடா சன்ஸ் சமர்ப்பித்துள்ள நிலையில் மத்திய அரசு பல்வேறு கோணத்தில் பாதுகாப்பு காரணிகளை ஆய்வு செய்யத் துவங்கியுள்ளது.
ராசெப் தயிப் எர்டோகன்
துருக்கி மற்றும் பாகிஸ்தான் நட்புறவில் இருக்கும் வேளையில், துருக்கி நாட்டின் அதிபரான ராசெப் தயிப் எர்டோகன்-க்கு இல்கர் ஆய்சி மிகவும் நெருக்கமானவராகவும், பல்வேறு காலக்கட்டத்தில் ராசெப் தயிப் எர்டோகன்-ன் நிர்வாகத்தின் கீழ் இல்கர் ஆய்சி பணியாற்றி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் முடிவு
ஏர் இந்தியா வெறும் நிறுவனமாக மட்டும் அல்லாமல் இந்தியாவின் பெருமையாகவும், மிகப்பெரிய சொத்தாகவும் இருக்கும் நிலையில், இல்கர் ஆய்சி நியமனத்தில் மத்திய அரசின் முடிவு தான் இறுதியானது. இதனால் டாடா குழுமத்திற்குக் கட்டாயம் பிளான் பி இப்போதைக்குத் தேவை என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.
டாடா-வின் பிளான் பி
இல்கர் ஆய்சி நியமனத்தில் இருக்கும் பிரச்சனை குறித்தும், இந்தியா – துருக்கி – பாகிஸ்தான் நட்புறவு குறித்தும் டாடா குழுமத்திடம் மத்திய அரசும், அரசு அதிகாரிகளும் விளக்கம் அளித்துள்ள நிலையில், டாடா குழுமம் கட்டாயம் பிளான் பி தயாரித்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Turbulence on Air India CEO Ilker Ayci appointment; TATA Chandrasekaran may need Plan B
Turbulence on Air India CEO Ilker Ayci appointment; TATA Chandrasekaran may need Plan B டாடா-வுக்கு மத்திய அரசு எதிர்ப்பு.. இல்கர் ஆய்சி நியமனத்தில் பிரச்சனை.. பிளான் பி தேவை..!