புதுடெல்லி,
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 3-0 என்ற புள்ளி கணக்கில் போட்டி தொடரை நடத்திய இந்தியா முழு அளவில் வெற்றி பெற்றது.
இதனால், ஐ.சி.சி. டி20 தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வீரர்கள் முன்னேறி செல்ல வாய்ப்பு அமைந்தது. இந்த தொடரில், சூரியகுமார் அதிகளவில் ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருக்கு அடுத்து வெங்கடேஷ் 2வது இடம் பிடித்துள்ளார்.
இதனையடுத்து பேட்டிங் தரவரிசையில், 35வது இடத்தில் இருந்து 21வது இடத்திற்கு சூரியகுமார் முன்னேறி உள்ளார். வெங்கடேஷ் அதிரடியாக 203வது இடத்தில் இருந்து 115வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.