” பிரதமர் மோடி தலையிட வேண்டும் ” – உக்ரைன் தூதரகம் வேண்டுகோள்

கியூ: உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. அந்நாட்டின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா கொத்துக்குண்டுகளால் தாக்கி வருகிறது. இதில் இந்தியா தலையிட வேண்டும் எனவும், ரஷ்ய அதிபரிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என இந்தியாவிலுள்ள உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ராணுவ நடவடிக்கை

ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீது தாக்குதலை நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில், ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கியூ மற்றும் உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதல் துவங்கியது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பல உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து ரஷ்யா தரப்பில், ‛உக்ரைன் மக்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தவில்லை. உக்ரைன் மீது நடத்தப்படுவது போர் அல்ல; ராணுவ நடவடிக்கை’ என விளக்கமளித்துள்ளது.

ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து குண்டுமழை பொழிந்து வருகின்றன. ரஷ்யாவின் கொத்துக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களால் ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உக்ரைன் படைகள் திணறி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கியூ விமான நிலையத்தை குறிவைத்து ரஷ்ய படைகள் குண்டுமழை பொழிகின்றன. ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க உக்ரைனில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகளில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

வேண்டுகோள்:

ராணுவம் தனது வேலைகளை செய்து வருவதால் நாட்டு மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம் குறித்து இந்தியாவிலுள்ள உக்ரைன் தூதரகம் தரப்பில், இந்தியா தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தூதரகம் தரப்பில், ‛ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும். தற்போதைய நிலை குறித்து உக்ரைன் அதிபருடன், பிரதமர் மோடி பேசி அறிந்து கொள்ள வேண்டும்’ என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா:

latest tamil news

போர் பதற்றம் தொடர்பாக ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்திய பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, ‛உக்ரைன் – ரஷ்யா இடையேயான பதற்றநிலை கவலையைத் தருகிறது. தற்போதைய சூழல் மிகப்பெரிய சிக்கலுக்கு வித்திடும்.’ எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

சுட்டு வீழ்த்தினோம்

latest tamil news

போர் தொடுத்த ரஷ்யா மீது பதிலடி தாக்குதலாக ரஷ்யாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. லுஹான்ஸ்க் நகரில் 5 போர் விமானங்களையும், ஒரு ஹெலிகாப்டரையும் வீழ்த்தியுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.