கின்னஸ் சாதனை படைத்த சிறுவர்களை நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர்.! <!– கின்னஸ் சாதனை படைத்த சிறுவர்களை நேரில் அழைத்து பாராட்டிய … –>

நினைவாற்றல் திறனில் கின்னஸ் சாதனை படைத்த மாணவரையும், தலைவர்கள் கதபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

சென்னையை சேர்ந்த மாணவன் வருண், ஒரு நிமிடத்தில் 42 புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர் பெயரை சொல்லி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.

மாணவன் வருணையும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் குழந்தைகளுக்கான ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று, தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் வேடமணிந்து பிரபலமான குழந்தைகளையும் நேரில் சந்தித்து பாராட்டினார்.

மேலும், அவர்களுக்கு திருவள்ளுவர் சிலை, சாக்லெட் மற்றும் புத்தகங்களை முதலமைச்சர் பரிசாக வழங்கினார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.