மொகாலி,
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். இவர் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தற்போது இந்திய அணியில் கேப்டன் பொறுப்பை துறந்து, புது உத்வேகத்துடன் விளையாடிவரும் ,விராட் கோலிக்கு யுவராஜ் சிங் உருக்கமான கடிதம் ஒன்றையும், பரிசு ஒன்றையும் அனுப்பினார்
“விராட், ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு நபராகவும், உன்னுடைய வளர்ச்சியை அருகில் இருந்து நான் பார்த்துள்ளேன். ஒரு இளைஞனாக வலை பயிற்சியில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களுடன் தோளோடு தோள் நின்று, இப்போது ஒரு புதிய தலைமுறைக்கு வழிகாட்டும் ஒரு ஜாம்பவானாக உருவெடுத்துள்ளாய்.
நீ ஒரு சூப்பர் ஸ்டார். . நாட்டை தொடர்ந்து பெருமைப்படுத்து”. இவ்வாறு கோலிக்கு உருக்கமான கடிதத்தை அனுப்பிய யுவராஜ் சிங், கோலிக்கு சிறப்பு வாய்ந்த கோல்டன் ஷு ஒன்றையும் பரிசாக அனுப்பினார்.
யுவராஜ் சிங் அனுப்பி உருக்கமான கடிதத்துக்கு விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
உங்களின் இந்த அற்புதமான கடிதத்துக்கு நன்றி. எனது கிரிக்கெட் பயணத்தில் முதல் நாளில் இருந்து பார்த்த ஒருவரிடம் இருந்து இந்த கடிதம் வந்திருக்கிறது. உங்கள் வாழ்க்கையும், நீங்கள் புற்று நோயில் இருந்து மீண்டு வந்ததும், கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் உத்வேகமாக இருந்தது.
நீங்கள் யார் என்பதை நான் அறிந்திருக்கிறேன். நீங்கள் எப்போதும் உங்களை சுற்றி இருப்பவர்களுக்காக மிகவும் தாராளமாகவும், அக்கறையுடனும் இருப்பீர்கள்.
இப்போது நாம் இருவரும் பெற்றோர்கள். அது என்ன ஒரு ஆசீர்வாதம் என்பதை அறிவோம். இந்த புதிய பயணத்தில் அனைத்து மகிழ்ச்சி, அழகான நினைவுகள் மற்றும் ஆசீர்வாதங்களை விரும்புகிறேன். என்று தெரிவித்துள்ளார்.