பகை வளர்ந்த பின்னணி…| Dinamalar

சோவியத் யூனியனில் ரஷ்யாவுடன் இணைந்து இருந்த உக்ரைன் பகை நாடான கதை..
1991 ஆக. :சோவியத் யூனியன் உடைந்த பின் 14 நாடுகள் சுதந்திர நாடாகின. இதில் உக்ரைனும் ஒன்று. லியோனிட் கிராவ்சுக் முதல் அதிபரானார்.
2004:ரஷ்ய ஆதரவாளரான விக்டர் யனுகோவிச் அதிபரானார். ஆனால் இதில் முறைகேடு நடந்ததாக ‘ஆரஞ்சு புரட்சி’ பெயரில் மறுதேர்தல் நடத்த போராட்டம் வெடித்தது. விக்டர் யுஷ்செங்கோ அதிபராக தேர்வு.
2005:இவர் உக்ரைனை நேட்டோ, ஐரோப்பிய யூனியனில் இணைப்பதாக உறுதியளித்தார்.

2008:உக்ரைன் ஒருநாள் எங்கள் கூட்டமைப்பில் இணையும் என அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் என நேட்டோ உறுதி.
2010:அதிபர் தேர்தலில் விக்டர் யுஷ்செங்கோவை வீழ்த்தி யானுகோவிச் அதிபரானார்.
2013:இவரது அரசு ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தகம் தொடர்பான பேச்சுக்களை நிறுத்தியது. ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை புதுப்பிக்க விரும்பினார். எதிர்ப்பு கிளம்பியது.
2014:உக்ரைனின் தென் பகுதியில் உள்ள கிரீமியா தீபகற்ப பகுதியை ரஷ்யா கைப்பற்றியது.
* தொடர்ச்சியாக கிழக்கு பகுதியில் டான்பாஸ் பிராந்தியத்தை பிரிவினைவாதிகள் தன்னாட்சி பகுதியாக அறிவித்துக்கொண்டனர். இதனால் மோதல் துவங்கின.
2014 மே :தொழிலதிபர் பெட்ரோ பொரோஷென்கோ அதிபரானார்.
2017:ஐரோப்பிய யூனியன் – உக்ரைன் இடைய வர்த்தகம், விசா இல்லாத பயணம் போன்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இது ரஷ்யாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
2021 நவ. :உக்ரைன் எல்லையில் ரஷ்யா பீரங்கி, ராணுவ வீரர்களை களமிறக்கியிருப்பது செயற்கைக்கோள் படம் மூலம் வெளியானது.டிச. 7:உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத்தடை விதிக்கும் என அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை.
2022 ஜன. 3:உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் பிடன் தொலைபேசியில் பேச்சு.
ஜன. 10: ஜெனிவாவில் அமெரிக்க – ரஷ்ய அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
ஜன. 17: ராணுவ கூட்டுப்பயிற்சிக்காக ரஷ்ய படைகள் பெலாரஸ் வர துவங்கின.
ஜன. 24:கிழக்கு ஐரோப்பாவில் கப்பல், போர் விமானம், வீரர்களை தயார்நிலைப்படுத்தியது நேட்டோ படை. சில மேற்கத்திய நாடுகள் கீவ் நகரில் தங்கள் துாதரங்களில் இருந்து உபரி பணியாளர்களை திரும்ப பெற்றது.
ஜன. 31: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்யா – அமெரிக்கா இடையே காரசார விவாதம்.
பிப். 2: உக்ரைன் அருகில் உள்ள போலந்து, ருமேனியா உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் பாதுகாப்புக்காக கூடுதலாக 3000 வீரர்கள் அனுப்பி வைப்பதாக அமெரிக்கா அறிவிப்பு.
பிப். 6: உக்ரைன் மீது படையெடுப்புக்கு தேவையான 70 சதவீத ராணுவ படைகளை எல்லையில் ரஷ்யா குவித்துள்ளது என அமெரிக்கா குற்றச்சாட்டு.
பிப். 8: மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினுடன் பிரான்ஸ் அதிபர் மக்ரோன் சந்திப்பு
.பிப். 11: உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பிப். 20க்குள் துவங்கும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் தெரிவித்தார்.
பிப். 12: அமெரிக்க அதிபர் பைடன் – ரஷ்ய அதிபர் புதின் காணொலி மூலம் பேச்சுவார்த்தை.
பிப். 21: பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை தன்னாட்சி உடைய பகுதியாக அங்கீகரிப்பதாகவும், அங்கு ரஷ்ய படை அமைதிப் பணியில் ஈடுபடும் என புடின் அறிவிப்பு.
பிப். 23: உக்ரைனில் அவசரநிலைப்பிரகடனம் அமல்படுத்த அந்நாட்டு பார்லிமென்ட் ஒப்புதல்.

பிப். 24: உக்ரைன் மீது ரஷ்ய படை தாக்குதலை தொடங்கியது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.