குடும்பத்தை விமர்சித்து மீம்ஸ் வெளியிட்டால் ரூ.10 கோடி நஷ்டஈடு: நடிகர் ஆவேசம்

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கு மகள் லட்சுமி மன்சு, மகன்கள் விஷ்ணு மன்சு, மனோஜ் மன்சு உள்ளனர். இவர்கள் அனைவரும் தெலுங்கு உள்பட சில மொழிகளில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், மோகன் பாபு நடித்த சன் ஆஃப் இந்தியா என்ற படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை இணையதளங்களில் தாறுமாறாக விமர்சனம் செய்து மீம்ஸ் வெளியிட்டு கலாய்த்தனர். இதனால் ஆவேசம் அடைந்த விஷ்ணு மன்சு, ‘ரசிக்கக்கூடிய சில மீம்ஸ்களை ஜாலியாக எடுத்துக்கொள்வோம். ஆனால், எங்கள் குடும்பத்தை பற்றி விமர்சித்தால் இனிமேல் பொறுத்துக்கொள்ள மாட்டோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்வோம்’ என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.