ஊடகங்களின் பௌதீக விரிவாக்கத்திற்கு ஏற்ப அதன் தரத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சி அவசியம்

ஊடகங்களின் பௌதீக விரிவாக்கத்திற்கு ஏற்ப அதன் தரத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சி தற்போது அவசியம் என்று அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற, பாடசாலை ஊடகக் கழகங்களை ஊக்குவிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் எதிர்காலம் தொடர்பான விசேட விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்சமயம் ஊடகங்கள் முழு சமூகத்தையும் உள்ளடக்கும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது

கடந்த ஆண்டு பிற்பகுதியில் சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தால் நான்கு முறை பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் நிரப்புவதற்காக நீண்ட வரிசைகள் காணப்பட்டன. எரிபொருள் தட்டுப்பாடொன்று காணப்படுகின்றது என்ற பிரச்சாரம் உண்மையா னெ;பதை கண்டறியாமல் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டதே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.

கடந்த நூற்றாண்டின் இறுதியில் உலகளாவிய ரீதியில் நமது நாடும் ஊடகங்களினூடாக மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சுமார் 4 – 5 வீதம் பங்களிப்பு செலுத்தியுள்ளது. இன்று அது 20 வீதமாக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம் 1948 இல், அதாவது நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டில் நிறுவப்பட்டது. இது அரசாங்கத்தின் தகவல் நிலையயகமாக செயய்படுவதுடன், நாட்டில் பாரபட்சமின்றி ஒரு நல்ல ஊடக அமைப்பையும் ஊடகக் கலாச்சாரத்தையும் பாரபட்சமின்றி கட்டியெழுப்ப பங்களிப்புச் செய்வதே இந்த நிறுவனத்தின் முக்கிய பணியாகும். இந்த நிறுவனத்தின் முக்கிய செயல்பாடு இரண்டு பகுதிகளைக் கொண்டதாக உள்ளது என்றும் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் விளக்கமளித்தார்.

இந்த பாடசாலை ஊடகக் கழகங்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் மேற்கூறிய இரண்டாம் பாகத்தை சேர்ந்தது. தற்போதைய வெகுஜன ஊடகத்துறை அமைச்சரின் நியமனத்துடன் இத்திட்டத்தை விரிவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.