ரஷ்யா மீது பயணம் மற்றும் வர்த்தகத் தடையை நியூசிலாந்து விதித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு தேவையான தளவாடங்கள் வர்த்தகத்திற்கு தடை விதிப்பதாகவும் தெரிவித்தார்.
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், அங்கு நிகழ உள்ள பேரழிவுக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என ஜெசிந்தா தெரிவித்தார்.
இருதரப்பிலான வெளியுறுவுத்துறை ஆலோசனைகள் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும், மேலும் சில தடைகளை ரஷ்யா மீது விதிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.