NSE ஆனந்த் சுப்ரமணியன் கைது.. சிபிஐ அதிரடி நடவடிக்கை..!

இந்தியாவையே உலுக்கிய NSE சித்ரா ராமகிருஷ்ணா வழக்கில் செபி, வருமான வரித் துறை, சிபிஐ எனப் பல அரசு அமைப்புகள் நேரடியாக விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒருவாரமாக இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியான ஆனந்த் சுப்ரமணியனை சிபிஐ விசாரணை செய்து வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார்.

என்எஸ்ஈ சித்ரா-வை கட்டுப்படுத்திய சென்னை – இமயமலை சாமியார் இவர் தானா..?

 ஆனந்த் சுப்ரமணியன் கைது

ஆனந்த் சுப்ரமணியன் கைது

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ பிப்ரவரி 25ஆம் தேதி (இன்று) தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் உயர் அதிகாரியான ஆனந்த் சுப்ரமணியன்-ஐ சில வர்த்தகர்களுக்கு முறைகேடாகச் சலுகை அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டு உள்ளார்.

 நெட்வொர்க் ஆக்சிஸ்

நெட்வொர்க் ஆக்சிஸ்

ஹைய் ப்ரீக்வென்சி வர்த்தகர்களுக்கு என்எஸ்இ தளத்தில் இருக்கும் நெட்வொர்க் ஆக்சிஸ் நியாயமற்ற முறையில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டதா என்பது குறித்த விசாரணையில் ஆனந்த் சுப்ரமணியன் செய்த தவறுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை முடித்த கையோடு கைது செய்துள்ளனர்.

 சித்ரா ராமகிருஷ்ணா
 

சித்ரா ராமகிருஷ்ணா

என்எஸ்ஈ அமைப்பின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணா-வின் முன்னாள் செயல் அதிகாரியும் ஆலோசகர் தான் இந்த ஆனந்த் சுப்ரமணியன், சிபிஐ அமைப்பு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட ஆனந்த் சுப்ரமணியனிடம் சென்னையில் வியாழக்கிழமை வரை நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார்.

 ஆனந்த் சுப்ரமணியன் பதவிக் காலம்

ஆனந்த் சுப்ரமணியன் பதவிக் காலம்

என்எஸ்ஈ அமைப்பில் ஆனந்த் சுப்ரமணியன் ஏப்ரல் 1, 2013 முதல் தலைமை மூலோபாய ஆலோசகராக இருந்தார், அவர் ஏப்ரல் 1, 2015 முதல் அக்டோபர் 21, 2016 வரை மீண்டும் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பளம்

சம்பளம்

என்எஸ்ஈ அமைப்பின் நிர்வாக இயக்குனராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா, பால்மர் லாரி நிறுவனத்தில் வெறும் 15 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்த ஆனந்த் சுப்ரமணியன்-ஐ ஜனவரி 18, 2013ல் 1.68 கோடி ரூபாய் சம்பளத்தில் NSE-யின் தலைமை செயல் அதிகாரியாக நியமித்தார்.

 இரண்டு முறை சம்பள உயர்வு

இரண்டு முறை சம்பள உயர்வு

இதைத் தொடர்ந்து வெறும் ஒரு வருட காலகட்டத்தில், அதாவது மார்ச் 2014ல் ஆனந்த் சுப்ரமணியன்-க்கு 20 சதவீதம் சம்பள உயர்வு அளிக்கப்பட்டு 2.01 சம்பளம் அளிக்கப்பட்டது. வெறும் 5 வார இடைவெளியில் A+ பர்பாமென்ஸ் எனக் கணக்குக் காட்டி 15 சதவீத கூடுதல் சம்பளம் உடன் 2.31 கோடி ரூபாய் சம்பளம் உயர்த்தப்பட்டது.

 5 கோடி ரூபாய் சம்பளம்

5 கோடி ரூபாய் சம்பளம்

2015ல் ஆனந்த் சுப்ரமணியன்-க்கு முதல் வகுப்பு விமானப் பயணம் எனப் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு ஆனந்த் சுப்ரமணியனின் CTC 5 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதை அனைத்தும் சித்ரா ராமகிருஷ்ணா தனது பதவியின் ஆதிக்கத்தைப் பயன்படுத்திச் செய்துள்ளார்.

 மோசடிகள், முறைகேடு

மோசடிகள், முறைகேடு

இந்தப் பணிக்காலத்தில் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் அனந்த் சுப்ரமணியன் இணைந்து பல மோசடிகள், முறைகேடுகளைச் செய்துள்ளனர். குறிப்பாகச் சர்வர் பயன்பாட்டைச் சில முக்கிய வர்த்தகர்களுக்கு மறைமுகமாக அளிக்கப்பட்டது, கோ லேகேஷன் முறைகேடுகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

CBI arrests Anand Subramanian today on unfair access of NSE servers to certain traders

CBI arrests Anand Subramanian today on unfair access of NSE servers to certain traders NSE ஆனந்த் சுப்ரமணியன் கைது.. சிபிஐ அதிரடி நடவடிக்கை..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.