போரில் சிக்கியுள்ள உக்ரைனில்
காதலர்கள்
எதற்கும் கலங்காமல் நிற்கும் புகைப்படங்கள் நிறைய வெளியாகி வருகின்றன. இந்தப் புகைப்படங்களை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
நேட்டோ அமைப்பில் சேரத் துடியாய் துடிக்கிறது உக்ரைன். உக்ரைனை எப்படியாவது நேட்டோ அமைப்புக்குள் கொண்டு வர அமெரிக்காவும் ஏகப்பட்ட நரித்தனங்களை செய்து வந்தது. பொறுத்துப் பார்த்த
ரஷ்யா
இப்போது உக்ரைனை போட்டுத் தள்ள ஆரம்பித்துள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் 2ம் உலகப் போருக்குப் பின்னர் இப்படியானதொரு தாக்குதலை யாரும் பார்த்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு உக்ரைனை தாக்கி துவம்சம் செய்து வருகிறது ரஷ்யா.
நீர், நிலம், ஆகாயம் என அனைத்து வழிகளிலும் உக்ரைனைத் தாக்கி வருகிறது ரஷ்யா. அவர்களிடம் சிக்கி உக்ரைன் படையினர் திணறிக் கொண்டுள்ளனர். தலைநகர் கீவ் ரஷ்யப் படையினரிடம் விரைவில் வீழும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கீவ் நகருக்கு அருகே ரஷ்யப் படையினருடன் உக்ரைன் படைகள் கடுமையாக மோதி வருகின்றன. ஆனால் ரஷ்யாவின் பலம் அதிகமாக இருப்பதால் உக்ரைன் படையினர் திணறுகின்றனர்.
எனக்கு குறி வச்சிருச்சு ரஷ்யா.. அழிக்கப் போறாங்க.. உக்ரைன் அதிபர் அலறல்
இந்த நிலையில் உக்ரைன் நாட்டுக் காதலர்கள் குறிப்பாக ரஷ்ய, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த காதல் ஜோடிகள் தங்களது அன்பையும், போர் நிற்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி வருகின்றனர். உக்ரைன் நாட்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் தஞ்சமடைந்துள்ளனர்.
இவர்களிடையே காதல் ஜோடிகள் பலவும் உள்ளனர். அவர்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் காணப்படும் காட்சிகள் வைரலாகியுள்ளன. பலரும் இவர்களது புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர். அன்புதான் ஜெயிக்கும்.. இந்தப் போர் தோற்று, காதலும், சமாதானமும், அன்பும் தழைத்தோங்கட்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
கை நிறைய அணு ஆயுதம்.. பணத்துக்கு பிச்சை எடுக்கும் பாகிஸ்தான்.. விளாசும் மக்கள்!
காங்கிரஸ் எம்.பி. சசிதரூரும் இதுதொடர்பான ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு காதல் ஜோடி நடு ரோட்டில் நிற்கிறது. இருவரும் ரஷ்யா, உக்ரைன் நாட்டவர். காதலன் உக்ரைன் நாட்டுக் கொடியையும், காதலி ரஷ்யக் கொடியையும் போர்த்திக் கொண்டு தலையோடு தலையை வைத்து அமைதியாக நிற்கின்றனர். பார்க்கவே இது உருக்கமாக இருக்கிறது.
இதுகுறித்து
சசி தரூர்
கூறுகையில், உக்ரைன் நாட்டுக் கொடியை காதலர் போர்த்திக் கொண்டுள்ளார். அந்தப் பெண் ரஷ்யக் கொடியுடன் நிற்கிறார். அன்பு வெல்லட்டும். அமைதி நிலவட்டும். போரையும், மோதலையும் வென்று இந்த நேசம் வாழட்டும் என்று அவர் கூறியுள்ளார்.