அதிகரிக்கும் நெருக்கடி.. உக்ரைனை காலி செய்யும் நிறுவனங்கள்.. திட்டமிட்டு செயல்படுகிறதா ரஷ்யா?

சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த நாடுகளில் ஒன்று உக்ரைன். இதன் மொழி, கலாச்சாரம், உள்ளிட்ட பலவும் ரஷ்யாவினை ஒத்துபோவதால், ரஷ்யாவின் ஒரு பகுதி தான் உக்ரைன் என கருதுகிறது.

ஆனால் உக்ரைனோ தடையற்ற வர்த்தகம், முதலாளித்துவ பொருளாதாரம், அதிக ஜனநாயக உரிமைகள், மேற்கத்திய நாடுகளின் நுகர்வு கலாச்சாரம், பொழுதுபோக்கு என பலவற்றிலும் சுதந்திரமாக வாழ ஆசைப்படுகின்றனர்.

ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி வாழவே விரும்புகின்றனர்.

பல சிக்கலில் உக்ரைன்

பல சிக்கலில் உக்ரைன்

விவசாயம், ஏற்றுமதியில் முக்கியமான நாடாக இருந்து வருகிறது. எனினும் ராணுவ பலத்தில் ரஷ்யாவினை விட பின் தங்கியுள்ளது. சரியான பொருளாதார வளர்ச்சியும் இல்லை. அதோடு வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் இருந்து வருகின்றது. இப்படி பல சிக்கல்களும், இன்னல்களுக்கும் மத்தியில் தான் உக்ரைன் இருந்து வருகின்றது.

ஆலைகளை மூடலாம்

ஆலைகளை மூடலாம்

இப்படி நெருக்கடியான நிலையினை இன்னும் மோசமாக்கும் விதமாக, ரஷ்யாவிலும் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக உக்ரைனில் பெரும் பதற்றமான நிலை இருந்து வருகின்றது. இந்த நிலையில் புரூவர் கார்ல்ஸ்பெர்க், ஜப்பான் டொபாக்கோ, கோகோ – கோலா பாட்டிலர் உள்ளிட்ட பல நிறுவனங்களும் தங்களது ஆலைகளை தற்காலிகமாக மூடியுள்ளன.

அதே நேரம் யுபிஎஸ்(UPS) மற்றும் ஃபெட்டெக்ஸ் (FedEx Corp) உள்ளிட்ட நிறுவனங்களும் அதன் சேவையினை நிறுத்தியுள்ளன. இது நாட்டிற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி சேவையை நிறுத்தியுள்ளன.

பீர் உற்பத்தி
 

பீர் உற்பத்தி

உக்ரைனின் பீர் சந்தையில் 31% பங்கைக் கொண்ட டென் மார்க்கின் கார்ல்ஸ்பெர்க், நாட்டில் உள்ள அதன் மூன்று மதுபான ஆலைகளிலும் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையில் கோகோ – கோலா தற்காலிகமாக தனது பாட்டில் ஆலையை மூடுவது உள்ளிட்ட மூடியும் உள்ளன.

ஆலைகள் மூடல்

ஆலைகள் மூடல்

ஜப்பான் புகையிலை நிறுவனம் மத்திய உக்ரைனில் உள்ள ஒரு சிகரெட் ஆலையை மூடியது. அதேபோல உலகளாவிய கப்பல் போக்குவரத்து நிறுவனமான மார்ஸ்க், பிப்ரவரி இறுதிவரையில் உக்ரைனில் துறைமுக அழைப்புகளை நிறுத்தியது. அதேபோல கருங்கடல் பகுதியில் உள்ள ஒடொசாவில் உள்ள அதன் முக்கிய அலுவலகத்தினை மூடியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

international companies shut down ukraine offices, factories after russia attack

international companies shut down ukraine offices, factories after russia attack/அதிகரிக்கும் நெருக்கடி.. உக்ரைனை காலி செய்யும் நிறுவனங்கள்.. திட்டமிட்டு செயல்படுகிறதா ரஷ்யா?

Story first published: Friday, February 25, 2022, 16:08 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.