உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்த பிரிட்டன் விமானங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை! ரஷியா அதிரடி

மாஸ்கோ: உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்த பிரிட்டன் பதிவு விமானங்கள் ரஷிய வான்வெளியை பயன்படுத்த ரஷியா அதிரடியாக தடை விதித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவைக் கடுமையாக எதிர்த்துள்ளன. அதேநேரம் சில நாடுகள் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், ரஷியாவோ தனது போர் தாக்குதலுக்கு, கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ அமைப்பின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவே நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறி வருகிறது.

ரஷியா உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதல்  சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது தொடர்பாக ரஷ்யா அதிபர் புதின் வெளியிட்டிருந்த வீடியோ உரையில் அண்டை நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைதான் இந்த தாக்குதல் என கூறியிருந்தார். மேலும், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது யாராவது தலையிட்டால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இருந்தாலும் ரஷியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா, பிரிட்டன்  உள்பட பல நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த போரினால் அதிக மனித இழப்புகளைச் சந்திக்க நேரிடும் எனப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷியாவுக்க  எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், பிரதமர் புதின் அழிவின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிவித்த  போரிஸ் ஜான்சன், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்ததுடன், உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக, தனது நாட்டு, போர் விமானங்கள், போர்க்கப்பல்களை அப்பகுதிக்கு அனுப்பப் பிரிட்டன் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

ரஷ்ய நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், இந்த இருண்ட காலத்தில் உக்ரைனில் மக்களுக்காகப் பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்துள்ளார், மேலும், நடைபெறும் பேரழிவுக்கு ரஷ்யா பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   இந்தியாவும் இந்த விவகாரத்தில் நடுநிலையான ஒரு நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்க உடனடி நடவடிக்கை தேவை என அழைப்பு விடுத்துள்ள இந்தியா, இது பெரும் நெருக்கடியான சூழலை உருவாக்கும் என எச்சரித்துள்ளது மேலும், நேற்று பிரதமர் மோடி ரஷிய அதிபர் புதினுடன் போரை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில், பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் தரையிறங்கோ அல்லது வான்வெளியை பயன்படுத்தவோ,கடக்கவோ ரஷியா தடை விதித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.