IPL 2022: வெவ்வேறு க்ரூப்களில் சென்னை மும்பை அணிகள்; ஆனாலும் இருமுறை மோதிக்கொள்வதெப்படி?

2022-க்கான ஐ.பி.எல் தொடர் வரும் மார்ச் 26-ம் தேதி தொடங்கிறது. சென்ற ஆண்டைவிட இரு புதிய அணிகள் இந்த வருடத்துக்கான ஐ.பி.எல் தொடரில் இணைந்துள்ளன. இதனால் லீக் போட்டிகளுக்கான எண்ணிக்கையும் உயரக்கூடும் புதிய ஃபார்மர்ட்டை அறிவித்துள்ளது பிசிசிஐ. இந்த நடைமுறை 2011-ம் ஆண்டில் புனே மற்றும் கொச்சி அணிகள் பங்கேற்றபோது ஏற்கெனவே கடைபிடிக்கப்பட்டது.

IPL 2022

அதாவது மொத்தம் உள்ள பத்து அணிகள் 5 அணிகள் கொண்ட இரு பிரிவுகளாக முதலில் பிரிக்கப்படும். அப்படி பிரிக்கப்படும் அணிகள் தங்கள் பிரிவில் மீதமுள்ள உள்ள நான்கு அணிகளுடன் இருமுறையும், மற்ற பிரிவில் இடம்பெற்றுள்ள 5 அணிகளுடன் ஒருமுறையும் மோதும். மேலும் தனக்கு நேராக மற்ற பிரிவில் இடம் பிடித்துள்ள அணியுடன் கூடுதலாக ஒரு போட்டியையும் விளையாடும்.

அணிகளில் பிரிவு சமபலத்துடன் இருக்க வேண்டும் என்பதால் இத்தனை ஆண்டு ஐ.பி.எல் வரலாற்றில் கோப்பையை வென்றது, இறுதிபோட்டிக்கு முன்னேறியது மற்றும் அணியின் மொத்த செயல்பாடுகள் ஆகியவற்றைவைத்து பிரிக்கப்பட்டுள்ளன.

IPL 2022

இதன்படி மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ என்ற வரிசையில் முதல் பிரிவிலும் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் குஜராத் என்ற வரிசையில் இரண்டாவது பிரிவிலும் அனைத்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. உதாரணத்திற்கு சென்னை அணியை எடுத்துக்கொள்வோம். அந்த அணி தன் பிரிவில் உள்ள 4 நான்கு அணிகளுடன் இருமுறையும் வேறு பிரிவில் உள்ள 5 அணிகளுடன் ஒவ்வொரு முறையும் மோதும். மேலும் கூடுதல் போட்டியாக தனக்கு நேராக மற்றொரு பிரிவில் இடம்பெற்றுள்ள மும்பை அணியுடன் ஒரு போட்டி விளையாடும். இது போல் ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாடுகிறது.

மொத்த லீக் போட்டிகளான 70-ல் 55 போட்டிகள் மும்பையிலும் 15 போட்டிகள் புனேவிலும் நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மும்பையில் நடக்கும் போட்டிகளை மைதானங்கள் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. வான்கடே மைதானத்தில் 20 போட்டிகள், ப்ரபோர்ன் மைதானத்தில் 15 போட்டிகள், DY படில் மைதானத்தில் 20 போட்டிகள் நடைபெறவுள்ளன.

தற்போது மும்பையில் நடக்கும் போட்டிகளை மைதானங்கள் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. வான்கடே மைதானத்தில் 20 போட்டிகள், ப்ரபோர்ன் மைதானத்தில் 15 போட்டிகள், DY படில் மைதானத்தில் 20 போட்டிகள் நடைபெறவுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.