ஒப்போ நிறுவனம் பைண்ட் எக்ஸ்5 மற்றும் பைண்ட் எக்ஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன்களை உலக அரங்கில் அறிமுகம் செய்துள்ளது. ஐபோனை மிஞ்சும் கேமரா இதில் உள்ளதாக நிறுவனம் விளம்பரப்படுத்தி உள்ளது. இதற்காக Hasselblad நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் கேமரா லென்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில், ஒப்போ ஃபைன்ட் எக்ஸ்5 போனில் 6.55 அங்குல முழு அளவு எச்டி+ OLED டிஸ்பிளே, 120Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இரு புறத்திலும் கிளாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் Snapdragon 888 chipset, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட கலர் ஓஎஸ் 12.1 வழஙகப்பட்டுள்ளது.
ஒப்போ பைண்ட் எக்ஸ்5 சிறப்பம்சங்கள்
Oppo Find X5 கேமராவைப் பொருத்தவரை 3 பின்புற கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் f/1.8 lens, OIS கொண்ட Sony IMX766 50 மெகாபிக்ஸல் கேமரா, Sony IMX766 sensor கொண்ட 50 மெகா பிக்ஸல் கொண்ட அல்ட்ரா வைட் லென்ஸ், 13 மெகா பிக்ஸல் டெலிபோட்டோ லென்ஸ் ஆகியவை அடங்கும்.
இதில் குறைந்த ஒளியிலும் தெளிவான படங்களை எடுக்க MariSilicon X chip பயன்படுத்தப்பட்டுள்ளது. இது multi-tier memory architecture முறைப்படி இயங்குகிறது. அதுமட்டுமில்லாமல் NPU, இமேஜ் சிக்னல் புராசஸர் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பமும் இந்த ஸ்மார்ட்போன் கேமராவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள Sony IMX615 சென்சார் கொண்ட 32 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவும் இரவு நேரங்களில் படம்பிடிக்க ட்யூன் செய்யப்பட்டுள்ளது.
ஒப்போ பைண்ட் எக்ஸ்5 ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 4,800mAh டூயல் செல் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 80W SuperVOOC சார்ஜிங் வசதியும், 30W AirVOOC ஒயர்லெஸ் சார்ஜிங் வசதியும், 10W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இது நீங்க நினைக்கிற மாதிரி போன் இல்ல… வேற லெவல் பெர்பாமன்ஸ் கொடுக்கும் iQOO 9 Pro
இந்த போன் 8ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் மெமரியுடன் வருகிறது. இந்த வேரியண்டின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.84,500க்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்போ பைண்ட் எக்ஸ்5 ப்ரோ சிறப்பம்சங்கள்
ஒப்போ பைன்ட் எக்ஸ்5 ப்ரோ போனில் 6.70 அங்குல 10-bit QHD+ (1,440×3,216 pixels) AMOLED டிஸ்பிளே, குறைந்த வெப்பம் கொண்ட LTPO தொழில்நுட்பத்துடன் வருகிறது. 120Hz ரெப்ரெஷ் ரேட், HDR10+ ஆதரவையும் இந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே பெறுகிறது.
இந்த போனில் 3 பின்புற கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் f/1.8 lens, OIS கொண்ட Sony IMX766 50 மெகாபிக்ஸல் கேமரா, Sony IMX766 sensor கொண்ட 50 மெகா பிக்ஸல் கொண்ட அல்ட்ரா வைட் லென்ஸ், 13 மெகா பிக்ஸல் டெலிபோட்டோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது
இதன் பிரைமரி சென்சாரில் 5 ஆக்ஸிஸ் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 13 சேனல் ஸ்பெக்ட்ரல் சென்சார் இந்த கேமரா அமைப்பில் கொடுகப்பட்டுள்ளது. எக்ஸ்5 போன் போலவே இதிலும் புகைப்படத்தை மேம்படுத்தும் மரிசிலிக்கான் எக்ஸ் சிப் தரப்பட்டுள்ளது.
Flagship அம்சங்கள் கொண்ட குறைந்த விலை Moto Edge 30 pro ஸ்மார்ட்போன் – விலை இதுதான்!
மேலும் இந்த போனில் யூடியூப், பேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் ஏர் கெஸ்டர் என்ற அம்சமும் தரப்பட்டுள்ளது. ஒப்போ பைண்ட் எக்ஸ்5 ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 4,800mAh டூயல் செல் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 80W SuperVOOC சார்ஜிங் வசதியும், 30W AirVOOC ஒயர்லெஸ் சார்ஜிங் வசதியும், 10W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த போன் 12ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் மெமரியுடன் வருகிறது. இந்த வேரியண்டின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,09,999ஆக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த போன்கள் அறிமுகமாகும் தேதி குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.