வாஷிங்டன்:உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த சில மணி நேரங்களிலேயே அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், தைவான், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலவீனமாக்க பல்வேறு பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன.
வங்கிகள் பாதிப்பு
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் நேற்று இரண்டாவது நாளாக தொடரும் நிலையில் ”தடைகள் விதிப்பது மட்டுமே ரஷ்யாவை கட்டுப்படுத்தாது” என உக்ரைன் அதிபர் வோலேடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.இந்நிலையில்அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறுநாடுகள் ரஷ்யா மீது பல புதிய பெருளாதாரதடைகளை அறிவித்து வருகின்றன.
டாலர் யூரோ பவுண்ட் யென் ஆகியவற்றில் ரஷ்யா வர்த்தகம் செய்ய முடியாதபடி முடக்க அமெரிக்க திட்டமிட்டுஉள்ளது.இதன் வாயிலாகரஷ்யாவின் முதல் ஐந்து பெரிய வங்கிகள் பாதிப்புகளை சந்திக்கும்.மேலும் மின்னணுசாதனங்கள் கணினிகள் முதல் விமான உதிரி பாகங்கள் வரை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யவும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது.
‘இந்த புதியபொருளாதார தடைகள் ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைபடுத்தும்’ என அமெரிக்கா நம்புகிறது.ரஷ்யாவின் பயணியர் விமானமான ‘ஏரோபிளோட்’ பிரிட்டனில் தரை இறங்க அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தடை விதித்து உள்ளார்.
”ரஷ்யாவின் பொருளாதார அஸ்திவாரத்தையும் நவீனமயமாக்கும் திறனையும் பலவீனப்படுத்துவோம்” என ஐரோப்பிய யூனியனின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயென் உறுதி அளித்துள்ளார்.இவை தவிர கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், தைவான் உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யா மீது பல புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன.
ரஷ்யா பதிலடி
தங்கள் மீது தடை விதித்துள்ள நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவும் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. பிரிட்டன் விமானங்கள் ரஷ்ய வான்வெளியில் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுஉள்ளது.பிரிட்டன் உள்ளிட்ட பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் இயற்கை எரிவாயு குறிப்பிட்ட சில உணவுப் பொருட்கள் உலோகங்கள் உள்ளிட்டவற்றுக்கு ரஷ்யாவையே சார்ந்துள்ளன.இந்நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மீது பொருளாதார தடைவிதிக்க ரஷ்யாவும் முடிவு செய்துள்ளது.
Advertisement