நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுங்கள்- உக்ரைன் ராணுவத்திற்கு புதின் அழைப்பு

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

 

இந்நிலையில், உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடக்குமுறையில் இருந்து உக்ரைனை மீட்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் எனவும் ரஷிய அமைச்சர் செர்ஜி லாவ்ரேவ் தெரிவித்தார்.

இந்நிலையில், உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கையில் எடுக்க வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். ரஷிய அரசு தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய புதின், உக்ரைனில் தற்போதைய அரசை அகற்றிவிட்டு ராணுவம் ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும்  என்றும், அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் எளிதான தீர்வை எட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்-இல் உக்ரைன் குழுவுடன் பேச தயார் என ரஷிய அதிபர் மாளிகை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்..
ரஷிய ராணுவ வீரரை தைரியமாக எதிர்கொண்ட உக்ரைன் பெண்- இணையத்தில் வைரலாகும் வீடியோ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.