Russia-Ukraine crisis | 'நாங்கள் எங்கே போவோம்?' – உக்ரைன் மக்களின் துயரத்தைக் காட்டும் வீடியோ தொகுப்பு

இரண்டாவது நாளாக உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனில் இதுவரை தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகிவிட்டதாகவும், ஏராளமான வீடுகள் தரைமட்டமாகிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்யப் படைகள் நடத்தும் தாக்குதலை நெட்டிசன்கள் பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு…

1. போர் பதற்றம் காரணமாக தனது குடும்பத்தை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பும் தந்தை, மகளை கட்டித் தழுவி அழும் காட்சி.

— New News EU (@Newnews_eu) February 24, 2022

2. ”நாங்கள் ஏங்கே போவோம்… நீங்களே கூறுங்கள், எங்களது வீடுகள் அழிக்கப்பட்டுவிட்டன” – கண்ணீருடன் உக்ரைன் மக்கள்.

3. உக்ரைனில் உள்ள கார்கிவ் பல்கலைக்கழகத்தின் அடிதளத்தில், உயிருக்கு பயந்து உணவில்லாமல் இந்திய மாணவ, மாணவிகள் தங்கி இருக்கும் காட்சி…

4. நியூயார்க்கில் உக்ரைனுக்கு ஆதரவாக பொதுமக்கள் பேரணி செல்லும் காட்சி.

5. ஆயுதங்கள் ஏந்தி வந்த ரஷ்ய வீரரிடம், உக்ரைன் பெண் ஒருவர், “நீங்க ஏன் எங்களது நாட்டை ஆக்கிரமிப்பு செய்கிறீர்கள்.. இந்த சூரிய காந்தி விதைகளை வைத்துக் கொள்ளுங்கள்… நீங்கள் இறந்த பிறகு இவை பூக்கட்டும்” என்று கோபமாக கூறும் காட்சி.

6. ரஷ்யாவின் தாக்குதலினால் உக்ரைன் மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ள காட்சி.

7. உக்ரைனின் குடியிருப்புப் பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்துவது கண்டு குழந்தை அழும் காட்சி.

— Smajo Bešo (@SmajoBeso) February 24, 2022

8. ரஷ்யாவின் தாக்குதலால் கிழக்கு உக்ரைனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து அடிதளத்திற்கு மாற்றப்பட்டுள்ள காட்சி.

9. உக்ரைன்வாசி ஒருவர் ஓட்டி வரும் காரின் மீது ரஷ்யாவின் ராணுவ பீரங்கி மோதும் நேரடி காட்சி.

10. ”நாங்கள் போரை விரும்பவில்லை. எலிகளைப் போல் மறைந்துகொள்வதைவிட எங்கள் தலைக்கு மேல் அமைதியான வானத்தை பார்க்க ஆசைப்படுகிறோம். நாங்கள் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம்” என்று உக்ரைன் பெண்கள் இருவர் கூறும் காட்சி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.