ஜெ., பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு மோதிரம் – Jayalalitha

புதுச்சேரி ; ஜெ., பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு கிழக்கு அ.தி.மு.க., சார்பில் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.மறைந்த தமிழக முதல்வர் ஜெ., 74வது பிறந்த நாளையொட்டி, கடந்த 24ம் தேதி பிறந்த, குழந்தைகளுக்கு புதுச்சேரி கிழக்கு அ.தி.மு.க., சார்பில், தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மாநில செயலாளர் அன்பழகன், குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராஜாராமன், பாஸ்கர், பெரியசாமி, மாநில இணைச் செயலாளர்கள் அன்பானந்தம், திருநாவுக்கரசு, பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணை செயலாளர்கள் அன்பழகன், கிருஷ்ணமூர்த்தி, காந்தி, குமுதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.