நாட்டில் கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து பொதுக் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
சமூக, சமய நல்லிணக்க, விளையாட்டு, உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான தடைகளில் தளர்வுகளை அளிக்க கோரி அறிவுறுத்தி உள்ளது.
பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த வணிக வளாகங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், ஸ்பாக்கள் உள்ளிட்டவைகளை அந்தந்த பகுதிகளின் சூழலுக்கு ஏற்ப முழு அளவில் இயங்க அனுமதிக்குமாறு மத்திய உள்துறை செயலாளர் அஜெய் பால்லா, மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.