Ukraine latest news live updates: உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களுடன் முதலமைச்சர் பேச்சு!

Ukraine News Today Live: உக்ரைன் ராணுவத்திற்கு ரஷ்ய அதிபர் அழைப்பு!

உக்ரைன் நாட்டின் தற்போதைய அரசை அகற்றிவிட்டு’ ராணுவ ஆட்சியை அமல்படுத்த’ உக்ரைன் ராணுவத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.

உக்ரைனுக்கு ஆயுத உதவி: ரஷ்யா கடும் எச்சரிக்கை!

உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கிய’ ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள், நேட்டோ அமைப்பில் சேர’ முயற்சித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் போர்.. தோல்வியில் முடிந்த ஐ.நா. தீர்மானம்!

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, ஐ.நா.சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியில் முடிந்தது.  11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி’ ரஷ்யா தீர்மானத்தை முறியடித்தது. இதற்கிடையே ஐரோப்பிய கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Ukraine News update: உக்ரைன் போர்.. கவலையில் இந்தியா

உக்ரைனில் ஏற்பட்டுள்ள சூழலால் இந்தியா மிகவும் கவலையடைந்துள்ளது. மனித உயிர்களை பலி கொடுத்து எந்த தீர்வையும் எட்ட முடியாது. வன்முறை மற்றும் விரோதப் போக்கை உடனடியாக நிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐநா சபையின் இந்திய பிரதிநிதி திருமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்ய படையெடுப்பு.. ஐ.நா.கவுன்சில் வாக்கெடுப்பு..புறக்கணித்த நாடுகள்!

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை கண்டித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா’ சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன.

ரஷ்ய ராணுவ வீரர்கள் திரும்ப வேண்டும்.. ஐ.நா தலைவர்!

உக்ரைனில் இருந்து ரஷ்ய ராணுவ வீரர்கள் உடனடியாக தங்கள் முகாம்களுக்கு திரும்ப வேண்டும் என ஐ.நா தலைவர் ஆண்டனியோ குட்ரெஸ் உத்தரவிட்டுள்ளார்.

Ukraine News Live Updates

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள்.. பிரதமர் இன்று ஆலோசனை!

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது குறித்து, டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் இன்று நண்பகல் 12 மணியளவில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

உக்ரைன் போர்: 2 நாடுகளுக்கு இன்று விமானங்களை அனுப்பும்  டாடா ஏர் இந்தியா நிறுவனம்!

உக்ரைன் போர்: வெளியுறவு அமைச்சகத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் டெல்லியிலிருந்து ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட், ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் ஆகிய இரு  நகரங்களுக்கும்’ 2 விமானங்களை இன்று அனுப்ப உள்ளதாக டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

Live Updates

12:27 (IST) 26 Feb 2022
மெலிடோபோல் நகரை கைப்பற்றிய ரஷ்யா

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள நீர் மின் நிலையத்தை கைப்பற்றிய ரஷ்ய படை மெலிடோபோல் நகரை கைப்பற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.


12:26 (IST) 26 Feb 2022
ருமேனியா சென்ற மேலும் ஒரு விமானம்

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மேலும் ஒரு ஏர் இந்தியா விமானம் ஏ1 – 1941 ருமேனியா புறப்பட்டது. புக்காரெஸ்ட்டில் இந்த விமானம் தரையிறங்கும் என்று கூறப்படுகிறது.


12:00 (IST) 26 Feb 2022
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முதல் கருப்பின பெண் நீதிபதி

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முதன்முறையாக நீதிபதி கேதான் ப்ரவுன் ஜாகசனை என்ற கருப்பின பெண் நீதிபதியை நியமித்தார் ஜோ பைடன்


11:34 (IST) 26 Feb 2022
ருமேனியாவின் புக்கரெஸ்ட்டில் ஏர் இந்தியா விமானம்

உக்ரைனில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர ருமேனியாவில் உள்ள புக்கரெஸ்ட் விமான நிலையத்தில் ஏர் இந்தியாவின் AI-1943 சிறப்பு விமானம் தரையிறங்கியது


10:57 (IST) 26 Feb 2022
உக்ரைனுக்கு உடனடியாக 250 மில்லியன் டாலர் நிதியுதவி.. பைடன் அறிவிப்பு!

ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனுக்கு ஒட்டு மொத்த தேவைக்காக உடனடியாக 250 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு, கல்விக்கு உதவ 350 மில்லியன் டாலர் வழங்கப்படும்-அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!


10:57 (IST) 26 Feb 2022
அனைத்து படிப்புகளும் தமிழக மாணவர்களுக்கு எளிதாக கிடைக்க வேண்டும்!

சென்னை, கோடம்பாக்கத்தில் மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி பேசிய முதல்வர் ஸ்டாலின், அனைத்து படிப்புகளும் தமிழக மாணவர்களுக்கு எளிதாக கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. நாட்டில் உள்ள சிறப்பான கல்லூரிகளில் 30 கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன என்று கூறினார்.


10:12 (IST) 26 Feb 2022
புக்கரெஸ்ட் விமான நிலையத்தில் இந்திய மாணவர்கள்!

உக்ரைனில் இருந்த இந்திய மாணவர்கள் சிலர், இப்போது ருமேனியாவின் புக்கரெஸ்ட் விமான நிலையத்தை அடைந்துள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிகாரிகள் வழங்கினர்.


10:12 (IST) 26 Feb 2022
இந்தியாவில் வெகுவாக குறைந்த கொரோனா!

இந்தியாவில் மேலும் 11,499 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 255 பேர் உயிரிழந்தனர்.


10:11 (IST) 26 Feb 2022
எல்லையில் குவியும் உக்ரைனியர்கள்.. உதவும் அண்டை நாட்டு மக்கள்!

உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளில் தஞ்சம் புகும் மக்களை வரவேற்க, சிரெட் நகர் எல்லையில், ரோமானிய நாட்டு மக்கள் உணவு, தண்ணீருடன் காத்திருக்கின்றனர்.


09:47 (IST) 26 Feb 2022
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா.. இணைய சேவைகள் முடங்கியது!

உக்ரைன் கிவ் நகரை, கைப்பற்ற ரஷ்யா போரிட்டு வரும் நிலையில் அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் முக்கிய இணைய சேவை ஜிகாட்ரான்ஸ், பாதிப்பை சந்தித்துள்ளதாக சைபர் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பான நெட் ப்ளாக்ஸ் தகவல்!


09:46 (IST) 26 Feb 2022
கோவை மாநகராட்சிக்கு ரூ. 200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு..செந்தில்பாலாஜி!

உக்ரைன் கிவ் நகரை, கைப்பற்ற ரஷ்யா போரிட்டு வரும் நிலையில் அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் முக்கிய இணைய சேவை ஜிகாட்ரான்ஸ், பாதிப்பை சந்தித்துள்ளதாக சைபர் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பான நெட் ப்ளாக்ஸ் தகவல்!


09:07 (IST) 26 Feb 2022
ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 7ம் தேதி டெல்லி செல்ல இருந்த பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று காலை சென்னையில் இருந்து ஆளுநர் டெல்லி புறப்பட்டு சென்றார்


09:07 (IST) 26 Feb 2022
எல்லைகளை நோக்கி நகர வேண்டாம்..

அண்டை நாடுகளின்’ இந்திய தூதரக அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் எல்லைகளை நோக்கி நகர வேண்டாம். உக்ரைனின் மேற்கு நகரங்களில் அடிப்படை வசதிகள் உள்ளதால் தங்குவதற்கு பாதுகாப்பான சூழல் உள்ளது. . கிழக்கு பகுதியில் உள்ளவர்கள் அங்கேயே பாதுகாப்பாக இருக்கவும் என உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.


08:59 (IST) 26 Feb 2022
எங்கேயும் ஓடி ஒளியப் போவதில்லை.. உக்ரைன் அதிபர்!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, வெள்ளிக்கிழமை இரவு பதிவு செய்த வீடியோவில்’ உயர் ஆலோசகர்களால் சூழப்பட்ட ஜனாதிபதி கட்டிடத்தின் முன் நின்று, “நாங்கள் கிவ்-ல் இருக்கிறோம். நாங்கள் உக்ரைனைப் பாதுகாக்கிறோம். ரஷ்ய படைகள் என்னை கொல்லவிருக்கின்றன. நானும் என் குடும்பமும் எங்கேயும் ஓடி ஒளியப் போவதில்லை என்று கூறினார்.

இதனிடையே’ உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன்’ அமெரிக்க அதிபர் பைடன் தொலைபேசி மூலம் பேசினார். இதுகுறித்து ட்வீட்டரில் பதிவிட்ட ஜெலன்ஸ்கி ”உக்ரைனின் நிலை என்ன என்பது இன்று முடிவாகிவிடும். இக்கட்டான நேரத்தில் அமெரிக்கா அளிக்கும் உதவிக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.


08:58 (IST) 26 Feb 2022
ராணுவ தளத்தின் மீதான ரஷ்ய தாக்குதல் முறியடிப்பு!

உக்ரைன் தலைநகர் கீவ்-ல் ராணுவ தளத்தின் மீதான ரஷ்யாவின் தாக்குதலை முறியடித்ததாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.


08:58 (IST) 26 Feb 2022
ரஷ்ய ஆல்கஹால் பானங்களுக்கு கனடா நோ!

உக்ரைன் நாட்டின் மீது படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்து, ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஆல்கஹால் பானங்கள்’ கனடா நாட்டில் உள்ள மதுபானக் கடைகளில் விற்பனையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.


08:33 (IST) 26 Feb 2022
இங்கிலாந்து வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்கத் தடை!

இங்கிலாந்து வான்வெளியில் ரஷ்யாவின் தனியார் ஜெட் விமானங்கள் பறக்கவும், தரையிறங்கவும் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.


08:32 (IST) 26 Feb 2022
நாஞ்சிக்கோட்டையில் ஜல்லிக்கட்டு!

தஞ்சாவூர் மாவட்டம்’ நாஞ்சிக்கோட்டையில் சிவராத்திரியை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. 650க்கும் மேற்பட்ட காளைகள், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.


08:32 (IST) 26 Feb 2022
ஒடிசா முன்னாள் முதல்வர் காலமானார்!

ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமானந்தா பிஸ்வால் (82) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.


08:31 (IST) 26 Feb 2022
புரோ கபடி லீக்.. டெல்லி தபாங் அணி சாம்பியன்!

புரோ கபடி லீக் இறுதி போட்டியில் 37-36 என்ற கணக்கில் பாட்னா அணியை வீழ்த்தி’ டெல்லி தபாங் அணி’ சாம்பியன் பட்டம் வென்றது.


08:31 (IST) 26 Feb 2022
இந்தியா – இலங்கை மோதும் 2வது டி20 போட்டி!

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி’ இன்று தரம்சாலாவில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


08:31 (IST) 26 Feb 2022
பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் தொடர்ந்து 114-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.