இந்தியாவில் தொடர்ந்து குறையுது கோவிட் பரவல்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில், கோவிட் பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 11,499 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. 23,598 பேர் குணமடைந்துள்ளனர். 255 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 1,21,881(0.28%) பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினசரி கோவிட் பரவல் விகிதம் 1.01 சதவீதம்
கோவிட்டில் இருந்து குணமடைந்தவர்கள் 4,22,70,482
மொத்த உயிரிழப்பு 5,13,481
மொத்த தடுப்பூசி:177.17 கோடி இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.