சிவகாமியின் சபதம் – புத்தர் சிலை – பகுதி- 19 |ஆடியோ வடிவில் கேட்க!

தமிழில் வெளியான புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான கல்கியின் சிவகாமியின் சபதம் ஆனந்த விகடன் பதிப்பக்கத்தில் புத்தகமாக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அதை ஒவ்வொரு பகுதியாக ஆடியோ வடிவில் Vikatan Audio யூடியூப் தளத்தில் கேட்கலாம். நழுவித் தரையில் விழுந்த முத்துமாலையைக் குமார சக்கரவர்த்தி குனிந்து எடுத்துக் கொடுத்ததையும், அதைச் சிவகாமி முகமலர்ச்சியுடன் வாங்கி அணிந்து கொண்டதையும் பார்த்த ஆயனரின் முகம் மீண்டும் பிரகாசம் அடைந்தது. சக்கரவர்த்தி இதையெல்லாம் கவனியாததுபோல் கவனித்தவராய், ஆயனரைப் பார்த்து, “மகா சிற்பியாரே! இந்த முத்துமாலையைப் போல் எவ்வளவோ உயர்ந்த பரிசுகளையெல்லாம் உமது புதல்வி வருங்காலத்தில் அடையப் போகிறாள்! இந்தப் பல்லவ ராஜ்யத்துக்கே அவளால் புகழும் மகிமையும் ஏற்படப் போகின்றன. வருங்காலத்தில் எது எப்படியானாலும், சிவகாமியின் நடனக் கலைப் பயிற்சி மட்டும் தடைப்படக்கூடாது. அவளுக்கு எவ்விதத்திலும் உற்சாகக் குறைவு நேரிடாமல் நீர் பார்த்துக் கொள்ள வேண்டும்!” என்று சொன்னார். ஆயனர், “பல்லவேந்திரா! தாங்களும் குமார சக்கரவர்த்தியும் உற்சாகப்படுத்துவதற்கு இருக்கும்போது சிவகாமிக்கு உற்சாகக் குறைவு ஏன் ஏற்படப்போகிறது? எனக்குத்தான் என்ன கவலை?” என்று சொல்ல, மகேந்திர பல்லவர் கூறினார்: “அப்படியில்லை, ஆயனரே! இந்த யுத்தம் காரணமாக நானும் குமார சக்கரவர்த்தியும் சில காலம் இவ்விடம் வரமுடியாமலும், உங்களைப் பார்க்க முடியாமலும் போகலாம். முழுமையாகக் கேட்க…

புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான கல்கியின் சிவகாமியின் சபதத்தை ஒவ்வொரு பகுதியாக ஆடியோ வடிவில் கேட்க Vikatan Audio யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.