பதிலடி கொடுக்க ரஷ்யா முடிவு| Dinamalar

மாஸ்கோ: பொருளாதார தடை விதித்த நாடுகளுக்கு சொந்தமாக ரஷ்யாவில் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய ரஷ்யா முடிவு செய்துள்ளது.

உக்ரைன் மீது 3வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து , அமெரிக்கா, பிரிட்டன் , ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன.

இந்நிலையில், ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத்தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் கூறியதாக ரஷ்ய செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாடுகளில் உள்ள ரஷ்ய குடிமக்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய பரிசீலனை செய்யப்படும். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் சொத்துகளை அரசுடைமையாக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.