புரோ ஆக்கி லீக்; பலம் பொருந்திய ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது இந்திய மகளிர் அணி!

புவனேஷ்வர், 
புரோ ஆக்கி லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது. ஒடிசா மாநிலம் கலிங்கா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய மகளிர் அணியினர் மீண்டும் கலிங்கா மைதானத்தில் சனிக்கிழமையன்று விளையாடுகின்றனர்.

கடந்த முறை இங்கு விளையாடிய போட்டியில் இந்திய மகளிர் அணி அமெரிக்காவை வீழ்த்தியது. அதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக ஆக்கி தரவரிசையில் ஒன்பதாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள இந்திய மகளிர் அணி, இப்போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.