தனுஷுக்கு ஆதரவாக களமிறங்கும் சிம்பு: இதென்னய்யா மெஹா ட்விஸ்ட்..!

தனுஷ்
நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ள படம் ‘
மாறன்
‘. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்தப்படத்தை தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார் தனுஷ். அண்மையில் வெளியான ‘மாறன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.

நடிகர் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கிய இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து அமெரிக்காவில் ஹாலிவுட் படமான தி க்ரே மேன் படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய தனுஷ், மீண்டும் ஐதராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

‘மாறன்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இதனிடையில் ‘மாறன்’ படப்பிடிப்பையும் நிறைவு செய்தார் தனுஷ்.

ரஜினி, விஜய் படங்களின் சாதனையை முறியடித்த அஜித்தின் ‘வலிமை’: இதெல்லாம் வேற லெவல்..!

இந்நிலையில் ‘மாறன்’ படத்தின் டிரெய்லர் குறித்து புதிய தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தனுஷ் படத்தின் டிரெய்லரை நடிகர்
சிம்பு
பிக்பாஸ் மேடையில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. கமல் பிக்பாஸில் இருந்து விலகியதை தொடர்ந்து சிம்பு இந்த வாரத்தில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் தான் சிம்பு ‘மாறன்’ பட டிரெய்லரை வெளியிட உள்ளார். இந்தப்படத்தில் சமுத்திரகனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள ‘மாறன்’ படம் நேரடியாக
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்
ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.