பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு வரும் டிரோன்கள் ஆயுதங்கள், வெடிகுண்டுகளைக் போடுவதாகத் தகவல் <!– பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு வரும் டிரோன்கள் ஆ… –>

பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட டிரோன்கள் ஜம்மு காஷ்மீரில் ஆயுதங்கள், வெடிபொருட்களைப் போட்டுச் சென்றுள்ளதாகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் அமைதியைக் குலைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள பாகிஸ்தான், பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து வந்தது. பதிலடி கொடுத்ததாலும், எல்லைப் பகுதியில் கண்காணிப்பை அதிகரித்துள்ளதாலும் இப்போது ஊடுருவல் குறைந்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்கு வரும் டிரோன்கள் எறிகணைகள், வெடிகுண்டுகள், கைத்துப்பாக்கிகள், வெடிபொருட்கள் ஆகியவற்றைப் போட்டுவிட்டுச் செல்வதாகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.

இதுவரை இல்லா வகையில் முதன்முறையாக நீர்ம நிலையில் உள்ள வேதிப்பொருளையும் டிரோனில் கொண்டுவந்து போட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.