திமுகவிடம் மேயர் பதவி கேட்டு தொல்லை கொடுக்கும் காங்கிரஸ், விசிக…! முதலமைச்சர் ஸ்டாலின் அப்செட்

சென்னை: நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில், திமுகவிடம் மேயர் பதவி கேட்டு காங்கிரஸ், விசிக தொல்லை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அப்செட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று (பிப்ரவரி 26) செய்தியாளரைச் சந்தித்த மாநிலகாங்கிரஸ் கட்சி அப்போது பேசிய அவர், மாநகராட்சியில் அதிக இடங்களில் மேயர் பதவி கேட்க இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்  காங்கிரஸ் கட்சி மொத்தம் 592 வார்டுகளில் வெற்றி பெற்றிருக்கிறது. மொத்தமுள்ள 12,838 வார்டுகளில், கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 1,370 வார்டுகளில் மட்டுமே போட்டியிட்டு 3.31 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது என்பதால்,  திமுகவிடம் மாநகராட்சியில் அதிக இடங்களில் மேயர் பதவி கேட்க இருப்பதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில், ஒன்பது மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர் பதவிகளை விசிகவிற்கு வழங்குமாறு திமுக தலைவர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அகில இந்திய அளவில் தலை சிறந்த முதலமைச்சர் என்ற பாராட்டுதலை முதலமைச்சர் ஸ்டாலின் பெற்றிருக்கிறார். இந்த நன்மதிப்பு தேர்தல் வெற்றிக்கான காரணமாக அமைந்துள்ளது. 55 விழுக்காடு என்கிற அளவில் விசிக வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட 27 இடங்களில் 18 இடங்களில் விசிக வெற்றி பெற்றுள்ளது” என்றார்.

இதுவும் திமுக கூட்டணியில் சலசப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சனம் எழுந்துள்ளது. கூட்டணி கட்சிகளின் அன்பு மிரட்டலால், திமுக தலவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக அப்செட்டாகி உள்ளதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.