சாலை அடையாளங்கள் அழிப்பு: எதிரிகள் நேராக நரகத்திற்கு செல்ல உதவும்- உக்ரைன் நிறுவனம்

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாட்களாக போர் தொடுத்து வருகிறது. முதலில் கிழக்கு பகுதியில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு எதிராக போர் தொடுத்ததாக ரஷியா தெரிவித்தது.
பின்னர் பெலாரஸ் உடன் இணைந்து கிழக்கு, வடக்கு, தெற்கு என மூன்று திசைகளிலும் இருந்து வான்வெளி தாக்குதலை நடத்தியது. அதன்பின் பாராசூட் மூலம் உக்ரைன் நகருக்குள் ரஷிய வீரர்கள் தரையிறங்கினர்.
இதற்கிடையே சரண் அடையமாட்டோம். நாட்டை இழக்கமாட்டோம் என உக்ரைன் அதிபர் உறுதியாக தெரிவித்தார். இதனால் கோபம் அடைந்த ரஷியா கீவ் நகரை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. மக்கள் வசிக்கும் இடங்கள், பாதுகாப்பு தளங்கள் என எல்லா இடங்களிலும் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
3-வது நாளில் இருந்து உக்ரைனுக்கு ஸ்வீடன், ஜெர்மனி போன்ற நாடுகள் உதவ முன்வந்துள்ளன. இதனால் உக்ரைன் ராணுவம் கீவ் நகரை எளிதாக இழந்து விட வாய்ப்பில்லை. தற்போது போரிட அந்நாட்டு பொதுமக்கள் கூட தயாராகி வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் தங்களால் முடிந்த அளவிற்கு சொந்த நாட்டிற்கு உதவ வேண்டும் என ஒவ்வொரு நிறுவனங்களும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் உக்ரவ்டோதோர் என்ற கட்டுமான நிறுவனம் சாலைகளை பாரமரித்து வருகிறது. ரஷியா ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் சாலை வழியாக ஊருக்குள் நுழைவதை தடுக்க, இந்த நிறுவனம் அனைத்து சாலை அடையாளங்களையும் அழித்துள்ளது.
இதனால் ரஷியா ராணுவ வீரர்கள் எந்த வழியாக முன்னேறிச் செல்வது எனத் வழித்தெறியாமல் திண்டாட வாய்ப்புள்ளது. இதனால் மூலமாக நகருக்குள் நுழையும் முயற்சி தள்ளிப்போகும் என அந்த நிறுவனம் நினைக்கிறது.
அந்த நிறுவனம் சமூக வலைத்தளத்தில் எதிரியான ரஷியா வீரர்களுக்கு மோசமான தொடர்பே உள்ளது. நாங்கள் அடையாளங்களை அழித்துள்ளோம். அவர்களால் நிலப்பரப்பு மூலம் செல்ல முடியாது. இது அவங்களை நேராக நரகத்திற்கு கொண்டு செல்ல உதவும்’’ எனத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, ரஷியா ராணுவம் வேகமாக முன்னேறுவதை தடுக்க தன்னைத்தானே வெடிக்கச் செய்ததுடன் பெரிய பாளத்தை சேதமடையச் செய்து ராணுவ வீரர் ஒருவர் உயிர்தியாகம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.