நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான
அர்ஜுன் ரெட்டி
படத்தின் மூலம் தெலுங்கு சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமா அளவில் பிரபலமானார் விஜய் தேவரகொண்டா.
அதையடுத்து
கீதா கோவிந்தம்
, டாக்ஸிவாலா போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தார். பின் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான நோட்டா படத்தின் மூலம் நேரடி தமிழ் படத்திலும் அறிமுகமானார் விஜய் தேவரகொண்டா. சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாத்துறையில் வெற்றிபெற்று இன்று தனக்கென தனி ரசிகர்கூட்டத்தை பெற்றுள்ளார் விஜய் தேவரகொண்டா.
ரஜினி அமைக்கப்போகும் வெறித்தனமான கூட்டணி…வெளியான சூப்பர் தகவல்..!
தற்போது
லிகர்
என்ற படத்தின் மூலம் அடுத்தகட்டத்துக்கு சென்றுள்ளார் விஜய் தேவரகொண்டா. மிகப்பெரும் பொருட்ச்செலவில் தயாராகும் இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இந்நிலையில் பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வரும்
அனன்யா பாண்டே
விஜய் தேவரகொண்டா ஜோடியாக லிகர் படத்தில் நடித்துவருகிறார்.
விஜய் தேவரகொண்டா
இதைத்தொடர்ந்து அனன்யா பாண்டே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தான் நடிக்கும் படங்களில் தைரியம் மிக்கவராகவும், முரட்டு ஆளாகவும் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. ஆனால் நிஜத்தில் அவர் மிகவும் அமைதியானவர்.
விஜய் தேவரகொண்டா
சினிமாவில் காட்டும் வீரத்தை அவர் நிஜ வாழ்க்கையில் காட்டுவதில்லை. சொல்லப்போனால் நிஜத்தில் அவர் ஒரு பயந்தாக்கொள்ளியாக இருக்கின்றார் என்று கூறியுள்ளார்.இவர் என்னதான் நகைச்சுவையாக இந்த கருத்தை தெரிவித்திருந்தாலும் விஜய் தேவரகொண்டா ரசிகர்களை இக்கருத்து கோபமடைய செய்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
தெய்வம் தல.. AK – வ பாத்தா போதும்…இது இதுதான் எங்களுக்கு தீபாவளி!